• Mar 26 2025

பெண்ணின் அசிட் வீச்சில் இளைஞன் காயம்; பணத் தகராறால் நடந்த சம்பவம்

Chithra / Mar 24th 2025, 12:02 pm
image


களுத்துறை - பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக  பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரண்டு பெண்களுக்கும் இளைஞர் குழுவொன்றுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது குறித்த பெண்கள் இருவரும் எதிர்த்தரப்பில் இருந்த இளைஞன் ஒருவன் மீது அசிட் வீச்சை மேற்கொண்டுள்ளனர். 

காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பெண்ணின் அசிட் வீச்சில் இளைஞன் காயம்; பணத் தகராறால் நடந்த சம்பவம் களுத்துறை - பேருவளை, அம்பேபிட்டிய பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறின் போது அசிட் வீச்சுக்குள்ளாகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக  பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரண்டு பெண்களுக்கும் இளைஞர் குழுவொன்றுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.தகராறின் போது குறித்த பெண்கள் இருவரும் எதிர்த்தரப்பில் இருந்த இளைஞன் ஒருவன் மீது அசிட் வீச்சை மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now