• Apr 28 2025

திடீர் வெடி விபத்தில் இளைஞன் மரணம்

Chithra / Nov 17th 2024, 11:53 am
image


கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அகுனகொலபெலஸ்ஸ - ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ ரன்ன வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள கராஜில் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளது.

கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்து அதன் மேல் மூடி கராஜில் வேலை செய்து கொண்டிருந்தவர் மீது விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடித்துச் சிதறிய இரும்பு பெரல் கராஜில் வாகனங்களுக்கு பெயிண்ட் தின்னர் கொண்டு வர பயன்படுத்தப்படும் வெற்று இரும்பு பெரல் எனவும், 

அதில் இருந்த கேசே பெரல் வெடிப்பதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெடித்த பெரலின் மூடி பகுதி கழன்று வீசப்பட்டு இளைஞனின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால் இளைஞன் அகுனகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

திடீர் வெடி விபத்தில் இளைஞன் மரணம் கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்றுள்ளது.அகுனகொலபெலஸ்ஸ - ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ ரன்ன வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள கராஜில் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளது.கார்களுக்கு வர்ணம் பூசும் கராஜுக்குள் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்து அதன் மேல் மூடி கராஜில் வேலை செய்து கொண்டிருந்தவர் மீது விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெடித்துச் சிதறிய இரும்பு பெரல் கராஜில் வாகனங்களுக்கு பெயிண்ட் தின்னர் கொண்டு வர பயன்படுத்தப்படும் வெற்று இரும்பு பெரல் எனவும், அதில் இருந்த கேசே பெரல் வெடிப்பதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெடித்த பெரலின் மூடி பகுதி கழன்று வீசப்பட்டு இளைஞனின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால் இளைஞன் அகுனகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now