• Nov 22 2024

எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் வெப்பநிலை..! - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

Chithra / Mar 4th 2024, 8:19 am
image

 

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விவசாயிகளை கோரியுள்ளார்.


எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் வெப்பநிலை. - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை  நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதேவேளை, வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விவசாயிகளை கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement