• May 02 2025

எச்சரிக்கை மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை; அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Chithra / May 1st 2025, 12:16 pm
image

 

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அதன்படி, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த பகுதிகளில் வெப்பநிலையானது 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்தநிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.


எச்சரிக்கை மட்டத்திற்கு உயரும் வெப்பநிலை; அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்  நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பகுதிகளில் வெப்பநிலையானது 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தநிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement