• May 21 2024

பயங்கரவாத திருத்த சட்டம்...! மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி...!samugammedia

Sharmi / Sep 20th 2023, 1:53 pm
image

Advertisement

ஜனாதிபதி செல்லும் இடம் எல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டு நாட்டில் பயங்கரவாத திருத்த சட்டத்தின் மூலம் மீண்டுமொரு அடக்குமுறையை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்வது நியாயமற்றது  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது விசேட கூற்று ஒன்றை  முன்வைத்து கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பத்திரிகை துறையானது ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான சுதந்திரத்தை பயங்கரவாத திருத்த சட்டம் இல்லாதொழித்துவிடும் . இதற்கு எதிராக நாடு தழுவிய கர்த்தாலை ஏற்பாடு செய்த போது ஒட்டுமொத்த மக்களும் ஆதரவளித்த நிலையில் மீண்டும் அடக்குமுறைகளை கொண்டு வருகின்ற இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என  வலியுறுத்தியுள்ளார்.

 நாடு பொருளாதார ரீதியில் மோசமான நிலையிலும் வங்குரோத்து அடைந்து இருக்கின்ற நிலையிலும் ஜனநாயக மரபுகளை ஒழிக்கின்ற இத்தகைய செயற்பாடு மிக மோசமானது .மக்கள் ஜனநாயக ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அது தடுக்கப்படுகின்ற நிலை இருக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கூறுகின்ற போதும் அரசாங்கம் அந்த சட்டத்தை நீக்கி அதற்கு  நிகரான சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால் சிங்கள மக்கள் உட்பட  ஒட்டுமொத்த மக்களின் நிலைப்பாடும் பயங்கரவாத திருத்த சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. ஆகவே இந்த சட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

பயங்கரவாத திருத்த சட்டம். மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்கிறார் செல்வம் எம்.பி.samugammedia ஜனாதிபதி செல்லும் இடம் எல்லாம் ஜனநாயகத்தை பற்றி பேசிக்கொண்டு நாட்டில் பயங்கரவாத திருத்த சட்டத்தின் மூலம் மீண்டுமொரு அடக்குமுறையை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொள்வது நியாயமற்றது  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது விசேட கூற்று ஒன்றை  முன்வைத்து கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், பத்திரிகை துறையானது ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான சுதந்திரத்தை பயங்கரவாத திருத்த சட்டம் இல்லாதொழித்துவிடும் . இதற்கு எதிராக நாடு தழுவிய கர்த்தாலை ஏற்பாடு செய்த போது ஒட்டுமொத்த மக்களும் ஆதரவளித்த நிலையில் மீண்டும் அடக்குமுறைகளை கொண்டு வருகின்ற இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என  வலியுறுத்தியுள்ளார்.  நாடு பொருளாதார ரீதியில் மோசமான நிலையிலும் வங்குரோத்து அடைந்து இருக்கின்ற நிலையிலும் ஜனநாயக மரபுகளை ஒழிக்கின்ற இத்தகைய செயற்பாடு மிக மோசமானது .மக்கள் ஜனநாயக ரீதியில் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது அது தடுக்கப்படுகின்ற நிலை இருக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐ.நா பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என கூறுகின்ற போதும் அரசாங்கம் அந்த சட்டத்தை நீக்கி அதற்கு  நிகரான சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. ஆனால் சிங்கள மக்கள் உட்பட  ஒட்டுமொத்த மக்களின் நிலைப்பாடும் பயங்கரவாத திருத்த சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே. ஆகவே இந்த சட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement