உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நாளைய தினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.
வவுனியா நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
தைப்பொங்கல் திருநாள் நாளையதினம் (15) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை குறைந்தளவு மக்களே பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க கூடியதாகவிருந்ததது
வுனியாவில் களை கட்டிய பொங்கல் - மக்கள் ஆர்வத்துடன் பொருள் கொள்வனவு.samugammedia உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.நாளைய தினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.வவுனியா நகரப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன், பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.தைப்பொங்கல் திருநாள் நாளையதினம் (15) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைகட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை குறைந்தளவு மக்களே பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க கூடியதாகவிருந்ததது