• Apr 26 2024

இன்று திறக்கப்படவுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை..! அகற்றக்கோரி தொடரும் போராட்டம் samugammedia

Chithra / May 25th 2023, 7:02 am
image

Advertisement

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது.

இதையடுத்து தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று திறக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தடல்புடலாக இடம்பெற்று வருகின்றது.

மேலும், குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தையிட்டியில் கைது செய்யப்பட்ட 9 பேரும் (24) மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து, பொலிசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கி அகற்ற முயன்றனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரையும் உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க பொலிசார் கோரினர். எனினும், 9 பேர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.

இந்நிலையில் கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன் ஜனநாயகரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


இன்று திறக்கப்படவுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை. அகற்றக்கோரி தொடரும் போராட்டம் samugammedia தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும் தனியார் காணிகளை மீள விடுவிக்கக் கோரியும் 3வது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது.இதையடுத்து தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று திறக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தடல்புடலாக இடம்பெற்று வருகின்றது.மேலும், குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை தையிட்டியில் கைது செய்யப்பட்ட 9 பேரும் (24) மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து, பொலிசார் போராட்டக்காரர்களை கைது செய்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கி அகற்ற முயன்றனர்.கைது செய்யப்பட்ட 9 பேரையும் உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க பொலிசார் கோரினர். எனினும், 9 பேர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.இந்நிலையில் கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஜனநாயகரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement