• Feb 12 2025

தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும்! மக்கள் போரட்ட முன்னணி திட்டவட்டம்

Chithra / Feb 11th 2025, 11:56 am
image


தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது, அது அகற்றப்படவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்துள்ளார்

வடக்கு கிழக்கு பகுதிகளிலே தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகள் பல்வேறு தடவைகளில் இடம்பெற்றுள்ளன.

நாங்களும் அதற்கான எதிர்ப்புகளை தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டு வருகின்றோம்.

குறிப்பாக தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டிமுடித்திருக்கின்றார்கள். இராணுவத்தின் உதவியுடன், இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் தனக்கு சொந்தமானது என எந்த வித பொறுப்பும் இல்லாமல், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தின்படி ஒருவருடைய இடத்திற்கு சென்று, நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டினால் அந்த இடம் அகற்றப்பட்டு அதன் உரிமையாளருக்கு கையளிக்கப்படவேண்டும்.

இந்த சட்டம் பௌத்தபேரினவாதத்திற்கு மாத்திரம் விதிவிலக்கானது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களிற்கு தேவையானது போல சட்டத்தை வளைத்துக்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இந்த நாட்டில் நடைபெறுகின்றன.

தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும், 

ஏனென்றால் அந்த மக்கள் வேறு ஒரு இடத்திலே தங்களிற்கு தேவையான காணியை பெறுவதற்கு தயாராகயில்லை.

சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட் நிலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு வடக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் ஆதரவை வழங்குவார்? என்ற கேள்வி எமக்குள்ளது.

ஆளுநரின் வீட்டிற்கு சென்று நாளை யாராவது அவரது வளவிற்குள் விகாரையை அமைத்துவிட்டு வேறு காணிகளை வழங்கினால் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும் மக்கள் போரட்ட முன்னணி திட்டவட்டம் தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது, அது அகற்றப்படவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்துள்ளார்வடக்கு கிழக்கு பகுதிகளிலே தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகள் பல்வேறு தடவைகளில் இடம்பெற்றுள்ளன.நாங்களும் அதற்கான எதிர்ப்புகளை தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டு வருகின்றோம்.குறிப்பாக தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டிமுடித்திருக்கின்றார்கள். இராணுவத்தின் உதவியுடன், இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் தனக்கு சொந்தமானது என எந்த வித பொறுப்பும் இல்லாமல், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.இலங்கையின் சட்டத்தின்படி ஒருவருடைய இடத்திற்கு சென்று, நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டினால் அந்த இடம் அகற்றப்பட்டு அதன் உரிமையாளருக்கு கையளிக்கப்படவேண்டும்.இந்த சட்டம் பௌத்தபேரினவாதத்திற்கு மாத்திரம் விதிவிலக்கானது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களிற்கு தேவையானது போல சட்டத்தை வளைத்துக்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இந்த நாட்டில் நடைபெறுகின்றன.தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும், ஏனென்றால் அந்த மக்கள் வேறு ஒரு இடத்திலே தங்களிற்கு தேவையான காணியை பெறுவதற்கு தயாராகயில்லை.சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட் நிலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு வடக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் ஆதரவை வழங்குவார் என்ற கேள்வி எமக்குள்ளது.ஆளுநரின் வீட்டிற்கு சென்று நாளை யாராவது அவரது வளவிற்குள் விகாரையை அமைத்துவிட்டு வேறு காணிகளை வழங்கினால் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement