• Sep 19 2024

யாழில் பித்தளையில் தாலிக்கொடி: 7ஆண்டுகளின் பின்னர் சிக்கிய கில்லாடி!

Sharmi / Jan 11th 2023, 11:54 pm
image

Advertisement

யாழில் பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய பலே கில்லாடி 7 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸாரிடம் சிக்கினார்.

யாழில் கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேநபரிடம் ஐந்தரைப் பவுணில் தாலிக்கொடி செய்வதற்கு பணம் கொடுத்திருந்த நிலையில், தங்கத்துக்குப் பதிலாக அவர் பித்தளையில் தாலிக்கொடியைச் செய்து கொடுத்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்இ சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.

இந்த நிலையில், சந்தேகநபர் தெல்லிப்பழைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், பொலிஸ் பரிசோதகர் நிதர்வன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நகைகள் அடகு வைக்கப்பட்டமைக்கான சிட்டைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.


யாழில் பித்தளையில் தாலிக்கொடி: 7ஆண்டுகளின் பின்னர் சிக்கிய கில்லாடி யாழில் பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்து ஏமாற்றிய பலே கில்லாடி 7 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸாரிடம் சிக்கினார்.யாழில் கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேநபரிடம் ஐந்தரைப் பவுணில் தாலிக்கொடி செய்வதற்கு பணம் கொடுத்திருந்த நிலையில், தங்கத்துக்குப் பதிலாக அவர் பித்தளையில் தாலிக்கொடியைச் செய்து கொடுத்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்இ சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.இந்த நிலையில், சந்தேகநபர் தெல்லிப்பழைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், பொலிஸ் பரிசோதகர் நிதர்வன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.சந்தேகநபரிடம் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நகைகள் அடகு வைக்கப்பட்டமைக்கான சிட்டைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement