• Sep 19 2024

வடக்கில் தற்போதும் 13ம் திருத்தம் நடைமுறையில் உள்ளதாம் - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Tamil nila / Feb 12th 2023, 5:22 pm
image

Advertisement

மறுமலர்ச்சியை நோக்கி வடக்கு மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலைய கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


இந்த நன்கொடையை எமக்கு வழங்கியமைக்காக இந்திய அரசுக்கும் அதன் மக்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம்.

 

இதேவேளை வெளிநாட்டிலுள்ள இலங்கை மக்களுக்காக தடையற்ற நிலைபேறான அணுகுதலையும் தங்கியிருத்தலையும் செயற்படுத்த அரசானது தற்போது விசா நடைமுறையினை வடிவமைத்து வருகின்றது.


வடக்கில் பல வகையான வெளிநாட்டு கலாசார செல்வாக்குகள். ஆன்மிகத் தொடர்புகள் காணப்படுகின்றன. 

இத்தகைய காரணங்களுக்காக மக்கள் இந்தியாவுக்குச் செல்வதுடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் பயணிக்கின்றனர்.


தற்போது விமானங்கள் கிட்டத்தட்ட முழு எண்ணிக்கையான பயணிகளுடன் இயங்குகின்றன. 

பயணப் படகுகள் ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்போதும் 13ம் திருத்தம் நடைமுறையில் உள்ளதாம் - வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு மறுமலர்ச்சியை நோக்கி வடக்கு மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலைய கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.இந்த நன்கொடையை எமக்கு வழங்கியமைக்காக இந்திய அரசுக்கும் அதன் மக்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். இதேவேளை வெளிநாட்டிலுள்ள இலங்கை மக்களுக்காக தடையற்ற நிலைபேறான அணுகுதலையும் தங்கியிருத்தலையும் செயற்படுத்த அரசானது தற்போது விசா நடைமுறையினை வடிவமைத்து வருகின்றது.வடக்கில் பல வகையான வெளிநாட்டு கலாசார செல்வாக்குகள். ஆன்மிகத் தொடர்புகள் காணப்படுகின்றன. இத்தகைய காரணங்களுக்காக மக்கள் இந்தியாவுக்குச் செல்வதுடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் பயணிக்கின்றனர்.தற்போது விமானங்கள் கிட்டத்தட்ட முழு எண்ணிக்கையான பயணிகளுடன் இயங்குகின்றன. பயணப் படகுகள் ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement