• Jun 08 2025

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் விருதுகள் விழா நாளை...!

shanuja / Jun 8th 2025, 4:33 pm
image

2024 ஆம் ஆண்டுக்கான ஹோம் லேண்ட்ஸ் இலங்கை கிரிக்கெட் விருதுகள்  நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. 


சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் சகோதரத்துவத்தின் சிறப்புமிக்க  பங்களிப்பை இணைத்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 


விருதுகள் விழாவின் போது மொத்தம் 46 விருதுகள் வழங்கப்படவுள்ளன.  சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 18 விருதுகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை கௌரவிக்கும் 20 விருதுகள் என்றவாறாக விருதுகள் வழங்கப்படவுள்ளன. 


அத்துடன் ஆண்டின் சிறந்த போட்டி நடுவர் மற்றும் சிறந்த நடுவர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன.  மேலும் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆறு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர் விருது வழங்குவது ஒரு சிறப்பம்சமாக இருக்கும்.



நிகழ்வில் பிரதம விருந்தினராக  இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே கலந்துகொள்ளவுள்ளார். மேலும்  தேசிய கேப்டன்கள், தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், SLC மேலாண்மை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், கார்ப்பரேட் தலைவர்கள், நிகழ்வு அனுசரணையாளர் பிரதிநிதிகள் மற்றும் கடந்த கால SLC நிர்வாகிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கெட் விருதுகள் விழா நாளை. 2024 ஆம் ஆண்டுக்கான ஹோம் லேண்ட்ஸ் இலங்கை கிரிக்கெட் விருதுகள்  நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் சகோதரத்துவத்தின் சிறப்புமிக்க  பங்களிப்பை இணைத்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. விருதுகள் விழாவின் போது மொத்தம் 46 விருதுகள் வழங்கப்படவுள்ளன.  சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் 18 விருதுகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை கௌரவிக்கும் 20 விருதுகள் என்றவாறாக விருதுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் ஆண்டின் சிறந்த போட்டி நடுவர் மற்றும் சிறந்த நடுவர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன.  மேலும் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆறு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர் விருது வழங்குவது ஒரு சிறப்பம்சமாக இருக்கும்.நிகழ்வில் பிரதம விருந்தினராக  இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே கலந்துகொள்ளவுள்ளார். மேலும்  தேசிய கேப்டன்கள், தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், SLC மேலாண்மை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், கார்ப்பரேட் தலைவர்கள், நிகழ்வு அனுசரணையாளர் பிரதிநிதிகள் மற்றும் கடந்த கால SLC நிர்வாகிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement