• Nov 25 2024

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு...!

Sharmi / Jun 15th 2024, 9:21 am
image

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 - பி.ப. 5.00 வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.

பி.ப. 5.00 - பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான அரசாங்கத்தின் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக 19 ஆம் திகதி, மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து 5 மணிவரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளது.

முன்றாம் நாளான 20 ஆம் திகதி, மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து  மு.ப. 10.30 - பி.ப. 5.00 வரை பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம்இ  யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. 

பி.ப. 5.00 - பி.ப. 5.30 வரை  ஒத்திவைப்பு வேளையின் போதான  எதிர்க்கட்சியின் பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 



எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு. எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.அந்தவகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 - பி.ப. 5.00 வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்  தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.பி.ப. 5.00 - பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான அரசாங்கத்தின் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இரண்டாம் நாள் அமர்வாக 19 ஆம் திகதி, மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.அதனை தொடர்ந்து 5 மணிவரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளது.முன்றாம் நாளான 20 ஆம் திகதி, மு.ப. 09.30 - மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.அதனை தொடர்ந்து  மு.ப. 10.30 - பி.ப. 5.00 வரை பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம்இ  யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. பி.ப. 5.00 - பி.ப. 5.30 வரை  ஒத்திவைப்பு வேளையின் போதான  எதிர்க்கட்சியின் பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement