• Jul 10 2025

பழிவாங்கும் நோக்குடன் செயற்படும் அநுர அரசு! விமல் வீரவன்ச சீற்றம்

Chithra / Jul 9th 2025, 1:13 pm
image

 

கொள்கலன்களை விடுவித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் அது தொடர்பில் கருத்து தெரிவித்தவரிடம் விசாரணை நடத்துவது பழிவாங்கும் நோக்கத்திலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாக முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய 223 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு அழைத்துள்ளனர்.

சுங்க வரி அறவிடலாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது, இது அநியாயமாகும்.

இன்று நாட்டில் அங்காங்கே வெடிக்கும் போதைபொருள், துப்பாக்கி வேட்டுக்கள் அந்த கொள்கலன்களில் இருந்திக்கலாம்.

அரசுக்கு பொருளாதார பிரச்சினை தொடர்பில் துளி அளவும் அக்கறை கொள்லாமல் இவ்வாறு தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என குறிப்பிட்டார். 

 

பழிவாங்கும் நோக்குடன் செயற்படும் அநுர அரசு விமல் வீரவன்ச சீற்றம்  கொள்கலன்களை விடுவித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் அது தொடர்பில் கருத்து தெரிவித்தவரிடம் விசாரணை நடத்துவது பழிவாங்கும் நோக்கத்திலாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாக முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.சர்ச்சைக்குரிய 223 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு அழைத்துள்ளனர்.சுங்க வரி அறவிடலாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் என்ன இருந்தது என்று யாருக்கும் தெரியாது, இது அநியாயமாகும்.இன்று நாட்டில் அங்காங்கே வெடிக்கும் போதைபொருள், துப்பாக்கி வேட்டுக்கள் அந்த கொள்கலன்களில் இருந்திக்கலாம்.அரசுக்கு பொருளாதார பிரச்சினை தொடர்பில் துளி அளவும் அக்கறை கொள்லாமல் இவ்வாறு தேவையில்லாத செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என குறிப்பிட்டார்.  

Advertisement

Advertisement

Advertisement