வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
குருணாகலை, பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
இந்த நாடு மாறி வருகிறது, அதற்கேற்ப நாம் புதிய வழியில் செயற்பட வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
எமது அமைச்சுகளிலும் இதைக் காண்கிறோம். இப்போதெல்லாம், சில நேரங்களில் நான் பெரும்பாலும் மாலை 5 மணிக்குப் பின்னர் அமைச்சுக்குச் செல்கிறேன்,.
அவ்வாறு சென்று கலந்துரையாடல் செய்ய முடியுமா என்று கேட்கும்போது, அதிகாரிகள் பரவாயில்லை, நேரம் ஒரு பிரச்சினையாக இல்லை என்றும் கூறுகின்றனர்.
இன்று, அரச அதிகாரிகள் இரவாகும் வரை வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு ஒன்பது அல்லது பத்து மணி வரை வேலை செய்யத் தயாராக உள்ளனர். அதிகாரிகள் இப்போது பயமின்றி வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த நாட்களில் புனித தந்தத்தை வழிபடுவதற்கான யாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்த மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள். குறிப்பாக, வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் இரவு முழுவதும் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறந்திருந்தன,. நித்திரை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
அங்கு இன அல்லது மதப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்னொரு இனத்திற்கான மரியாதை இருந்தது, இன்னொரு மதத்திற்கான மரியாதை இருந்தது.
சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் என்றல்லாது, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இது நடக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.
வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் இப்போது பயமின்றி வேலை செய்யத் தொடங்கியுள்ளனர் பிரதமர் கருத்து வரலாற்றில் முதல்முறையாக கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளதாகவும், இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இலங்கையர்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.குருணாகலை, பரகஹதெனிய பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,இந்த நாடு மாறி வருகிறது, அதற்கேற்ப நாம் புதிய வழியில் செயற்பட வேண்டும். நாம் ஒரு புதிய வழியில் செயற்பட வேண்டும் என்று மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். எமது அமைச்சுகளிலும் இதைக் காண்கிறோம். இப்போதெல்லாம், சில நேரங்களில் நான் பெரும்பாலும் மாலை 5 மணிக்குப் பின்னர் அமைச்சுக்குச் செல்கிறேன்,. அவ்வாறு சென்று கலந்துரையாடல் செய்ய முடியுமா என்று கேட்கும்போது, அதிகாரிகள் பரவாயில்லை, நேரம் ஒரு பிரச்சினையாக இல்லை என்றும் கூறுகின்றனர். இன்று, அரச அதிகாரிகள் இரவாகும் வரை வேலை செய்யத் தொடங்கியுள்ளனர். இரவு ஒன்பது அல்லது பத்து மணி வரை வேலை செய்யத் தயாராக உள்ளனர். அதிகாரிகள் இப்போது பயமின்றி வேலை செய்யத் தொடங்கியுள்ளனர்.இந்த நாட்களில் புனித தந்தத்தை வழிபடுவதற்கான யாத்திரை நடைபெறுகிறது. அங்கிருந்த மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்று பாருங்கள். குறிப்பாக, வரலாற்றில் முதல் முறையாக, கண்டியில் உள்ள பள்ளிவாயல்கள் இரவு முழுவதும் புனித தந்தத்தை வழிபட வரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறந்திருந்தன,. நித்திரை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது. அங்கு இன அல்லது மதப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்னொரு இனத்திற்கான மரியாதை இருந்தது, இன்னொரு மதத்திற்கான மரியாதை இருந்தது. சிங்களவர்கள், முஸ்லிம்கள் அல்லது தமிழர்கள் என்றல்லாது, அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இலங்கை அரசாங்கம் இருக்கிறது என்ற உணர்வின் காரணமாக இது நடக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.வேட்பாளர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.