• Jul 31 2025

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி; கண்டுபிடிக்கப்பட்ட கடிதம்

Chithra / Jul 30th 2025, 9:10 am
image

 

யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பேராதனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் உடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திகில்ருக்ஷி ஜெயலத் குமாரகே என்ற 45 வயதுடைய மனைவிக்கும் 17 வயதுடைய ஷிஹாரா அஷின்சானி ஹபுகோடா என்ற மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தின் இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்றிருந்தார். அவர் இரவில் வந்திருந்தார். சம்பிக்க நிலந்த பாடசாலையில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

எனினும் அதற்குள், அவர் ஏற்கனவே தனது மனைவியையும் மற்ற மகளையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இந்தநிலையில் உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர் சம்பிக்க நிலந்த மற்றொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே உயிர் மாய்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

அத்துடன் பொலிஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர் சம்பிக்க நிலந்த எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரின் குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட பின்னணி; கண்டுபிடிக்கப்பட்ட கடிதம்  யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக்க நிலந்த தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பேராதனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் உடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. உயிரை மாய்த்துக் கொண்ட நிலந்த தனது 13 வயது மகளையும் கொல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திகில்ருக்ஷி ஜெயலத் குமாரகே என்ற 45 வயதுடைய மனைவிக்கும் 17 வயதுடைய ஷிஹாரா அஷின்சானி ஹபுகோடா என்ற மகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பின்னர் கொலை செய்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.சம்பவத்திற்கு முந்தைய நாள் குடும்பத்தின் இளைய மகள் பாடசாலை சுற்றுலா சென்றிருந்தார். அவர் இரவில் வந்திருந்தார். சம்பிக்க நிலந்த பாடசாலையில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார்.எனினும் அதற்குள், அவர் ஏற்கனவே தனது மனைவியையும் மற்ற மகளையும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இந்தநிலையில் உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர் சம்பிக்க நிலந்த மற்றொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே உயிர் மாய்ப்புக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் பொலிஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர் சம்பிக்க நிலந்த எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement