• May 19 2024

யாழில், இடம்பெற்ற மாபெரும் முத்திரை கண்காட்சி!

Tamil nila / Feb 12th 2023, 6:33 pm
image

Advertisement

இன்றைய தினம் முத்திரை மற்றும் நாணயக் கண்காட்சி இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.



அருண்பணிச்சபை மற்றும் புனித ஞானப் பிரகாசியார் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த முத்திரை கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.



யாழ்ப்பாணத்தை பிறப்மிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வாமணன் அவர்களது முத்திரைகள் மற்றும் நாணயங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன.



65 நாடுகளுக்கும் மேற்பட்ட நாணய குற்றிகள் மற்றும் நாணயத் தாள்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன.



1996ம் ஆண்டில் இருந்து அவர் முத்திரைகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதை தனது பொழுது போக்காக செய்து வருவதாக தெரிவித்தார்.



இந்த கண்காட்சி மூலம் மாணவர்களை தேவையற்ற இலத்திரனியல் உலகில் இருந்தும் அநாவசிய செயற்பாடுகளில் இருந்தும் சற்று விலக்கி பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுத்துவது நோக்கமாக உள்ளது.



இக் கண்காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிடுவதை அவதானிக்க முடிந்தது.


யாழில், இடம்பெற்ற மாபெரும் முத்திரை கண்காட்சி இன்றைய தினம் முத்திரை மற்றும் நாணயக் கண்காட்சி இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.அருண்பணிச்சபை மற்றும் புனித ஞானப் பிரகாசியார் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த முத்திரை கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணத்தை பிறப்மிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வாமணன் அவர்களது முத்திரைகள் மற்றும் நாணயங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன.65 நாடுகளுக்கும் மேற்பட்ட நாணய குற்றிகள் மற்றும் நாணயத் தாள்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன.1996ம் ஆண்டில் இருந்து அவர் முத்திரைகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதை தனது பொழுது போக்காக செய்து வருவதாக தெரிவித்தார்.இந்த கண்காட்சி மூலம் மாணவர்களை தேவையற்ற இலத்திரனியல் உலகில் இருந்தும் அநாவசிய செயற்பாடுகளில் இருந்தும் சற்று விலக்கி பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபடுத்துவது நோக்கமாக உள்ளது.இக் கண்காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிடுவதை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement