• Apr 05 2025

சோளம் கொடுக்க சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: சித்தப்பா கைது..!

Sharmi / Apr 3rd 2025, 5:00 pm
image

சோளம் கொடுக்க சென்ற 13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிராந்துருக்கோட்டே பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் தனது தாயின் அறிவுறுத்தலுக்கமைய சித்தப்பாவின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்திற்குப் பிற்பாடு பாடசாலையில், குறித்த சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை கண்ட ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.  

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர் நேற்றையதினம்(02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருக்கோட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    


சோளம் கொடுக்க சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: சித்தப்பா கைது. சோளம் கொடுக்க சென்ற 13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிராந்துருக்கோட்டே பகுதியை சேர்ந்த சிறுமியொருவர் தனது தாயின் அறிவுறுத்தலுக்கமைய சித்தப்பாவின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்திற்குப் பிற்பாடு பாடசாலையில், குறித்த சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை கண்ட ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர் நேற்றையதினம்(02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருக்கோட்டே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Advertisement

Advertisement