• Jun 02 2024

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்- கொலையின் பகீர் பின்னணி என்ன? samugammedia

Tamil nila / Jun 8th 2023, 1:38 pm
image

Advertisement

 இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ள  சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன? தற்போது பார்க்கலாம்.

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் லிவ் இன் உறவில் வசித்துவந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் உடல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா-பஹ்யந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் 32 வயதான சரஸ்வதி வித்யா.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலனான 56 வயது மனோஜ் ஷைனி என்பவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். சரஸ்வதியும், மனோஜும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சரஸ்வதியின் சிதைந்த உடலை மீட்டுள்ளனர்.

இதற்கமைய சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது வெளிசத்துக்கு வந்துள்ளது. சரஸ்வதியை படுகொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டியது யார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக இருவரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கைதான நபர்களின் அடையாளத்தை வெளியிட மறுத்துள்ளனர்.

சரஸ்வதியை கொலை செய்தது, கொலைக்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. 

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்- கொலையின் பகீர் பின்னணி என்ன samugammedia  இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ள  சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன தற்போது பார்க்கலாம்.இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் லிவ் இன் உறவில் வசித்துவந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண்ணின் உடல் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா-பஹ்யந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் 32 வயதான சரஸ்வதி வித்யா.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலனான 56 வயது மனோஜ் ஷைனி என்பவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். சரஸ்வதியும், மனோஜும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில், தொடர்புடைய அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சரஸ்வதியின் சிதைந்த உடலை மீட்டுள்ளனர்.இதற்கமைய சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது வெளிசத்துக்கு வந்துள்ளது. சரஸ்வதியை படுகொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டியது யார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக இருவரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கைதான நபர்களின் அடையாளத்தை வெளியிட மறுத்துள்ளனர்.சரஸ்வதியை கொலை செய்தது, கொலைக்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement