• May 17 2024

கணினி விளையாட்டு தொடர்பில் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கு!

Chithra / Dec 10th 2022, 10:38 am
image

Advertisement

தங்கள் பிள்ளைகள் கணினி விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாகக் கூறி, மூன்று பெற்றோர்களினால் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்ய கனேடிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கணினி விளையாட்டு நிறுவனத்திற்கு எதிராக பெற்றோர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கணினி விளையாட்டுக்கு அதீத அடிமையானதால், தங்களது குழந்தைகள் நித்திரை கொள்ளவும், சாப்பிடவும், குளிக்கவும் கூட மறுத்துவிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்குள் ஒரு குழந்தை 7700 மணிநேரம் இந்த கணினி விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கணினி விளையாட்டுக்கு அடிமையாவது அங்கீகரிக்கப்பட்ட மனநலக் கோளாறு அல்ல என பிரதிவாதியான கணினி விளையாட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கணினி விளையாட்டு தொடர்பில் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கு தங்கள் பிள்ளைகள் கணினி விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதாகக் கூறி, மூன்று பெற்றோர்களினால் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்ய கனேடிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.கணினி விளையாட்டு நிறுவனத்திற்கு எதிராக பெற்றோர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த கணினி விளையாட்டுக்கு அதீத அடிமையானதால், தங்களது குழந்தைகள் நித்திரை கொள்ளவும், சாப்பிடவும், குளிக்கவும் கூட மறுத்துவிட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.இரண்டு வருடங்களுக்குள் ஒரு குழந்தை 7700 மணிநேரம் இந்த கணினி விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், கணினி விளையாட்டுக்கு அடிமையாவது அங்கீகரிக்கப்பட்ட மனநலக் கோளாறு அல்ல என பிரதிவாதியான கணினி விளையாட்டு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement