• Nov 24 2024

குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்நேரடியாகப் பார்வையிட்டார் அரச அதிபர் - பிரதீபன்

Tharmini / Oct 15th 2024, 4:57 pm
image

ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி  வடிகாலின் நிலைமை தொடர்பாகவும்  அதனைத்  தொடர்ந்து மானிப்பாயில்  அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும்  அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (15) காலை 10.00 மணிக்கு நேரடியாக பார்வையிட்டார்.

மேற்படி இரு வடிகால்களினையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் அரசாங்க அதிபர் பார்வையிட்டு, டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள், மழைநீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகாலின் நீரோட்டம் மற்றும் துப்பரவு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்க வேண்டிய நடிவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக எடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் இதன் முன்னேற்றங்களை அடுத்துவரும் டெங்கு கட்டுப்பாடுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். 

இக் களஆய்வில் நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நல்லூர் மற்றும் மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாாிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியிலாளர், யாழ்  மாநகரசபை ஆணையாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நல்லூர் மானிப்பாய் பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாநகர சபை, மற்றும் பிரதேச சபைகளின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,  பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள்  கலந்து கொண்டார்கள்.











குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்நேரடியாகப் பார்வையிட்டார் அரச அதிபர் - பிரதீபன் ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி  வடிகாலின் நிலைமை தொடர்பாகவும்  அதனைத்  தொடர்ந்து மானிப்பாயில்  அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும்  அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான  திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (15) காலை 10.00 மணிக்கு நேரடியாக பார்வையிட்டார்.மேற்படி இரு வடிகால்களினையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் அரசாங்க அதிபர் பார்வையிட்டு, டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள், மழைநீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகாலின் நீரோட்டம் மற்றும் துப்பரவு சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்க வேண்டிய நடிவடிக்கைகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக எடுப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும் இதன் முன்னேற்றங்களை அடுத்துவரும் டெங்கு கட்டுப்பாடுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். இக் களஆய்வில் நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், நல்லூர் மற்றும் மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாாிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியிலாளர், யாழ்  மாநகரசபை ஆணையாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நல்லூர் மானிப்பாய் பிரதேச சபைகளின் செயலாளர்கள், மாநகர சபை, மற்றும் பிரதேச சபைகளின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,  பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள்  கலந்து கொண்டார்கள்.

Advertisement

Advertisement

Advertisement