• Jan 26 2025

அநுர அரசின் சரிவு ஆரம்பித்துவிட்டது; நிரூபித்த தேர்தல் தோல்வி - உதய கம்மன்பில சூளுரை

Chithra / Jan 21st 2025, 8:52 am
image

 

பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது  என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதன் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாங்கமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளது.

அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது 20 வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு  தீர்மானித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது. 

ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது.

அதனால் அரசாங்கம் இந்த சரிவை கையால் பிடித்து சரி செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார தெரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி அநுர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர் இல்லத்தை மீள பெறுவதாக தெரிவித்திருக்கிறார். இது ஜனாதிபதியின் அனுபவமில்லாமை அல்லது வைறாக்கியத்தில் மேற்கொள்ளும் செயலாகும்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் அரச தலைவர்களாக வருபவர்கள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதால உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்த உறுதியான தீரமானங்களை எடுப்பதற்கு பின்வாக்கும் அபாயம் இருக்கிறது. என்றார்.

மேலும்  திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீட்பு மற்றும் கிழக்கில் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் என்பன எமது ஆட்சி காலத்திலிலேயே இடம்பெற்றன. 

எனவே தற்போது கிழக்கில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி  புதுமையாக கூறுவதற்கு எதுவும் இல்லை.  

2020இன் பின்னர் நான் தயாரித்த ஆடையை தற்போது ஜனாதிபதி அநுர அணிந்து செல்வதாக  உதய கம்மன்பில தெரிவித்தார்.  

அநுர அரசின் சரிவு ஆரம்பித்துவிட்டது; நிரூபித்த தேர்தல் தோல்வி - உதய கம்மன்பில சூளுரை  பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது  என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதன் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாங்கமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளது.அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது 20 வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு  தீர்மானித்துள்ளது.நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்திருப்பது தெரியவருகிறது.அதனால் அரசாங்கம் இந்த சரிவை கையால் பிடித்து சரி செய்ய முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார தெரிந்துகொள்ள வேண்டும்.அத்துடன் ஜனாதிபதி அநுர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் உத்தியோகபூர் இல்லத்தை மீள பெறுவதாக தெரிவித்திருக்கிறார். இது ஜனாதிபதியின் அனுபவமில்லாமை அல்லது வைறாக்கியத்தில் மேற்கொள்ளும் செயலாகும்.ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் அரச தலைவர்களாக வருபவர்கள், பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதால உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்த உறுதியான தீரமானங்களை எடுப்பதற்கு பின்வாக்கும் அபாயம் இருக்கிறது. என்றார்.மேலும்  திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீட்பு மற்றும் கிழக்கில் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் என்பன எமது ஆட்சி காலத்திலிலேயே இடம்பெற்றன. எனவே தற்போது கிழக்கில் இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி  புதுமையாக கூறுவதற்கு எதுவும் இல்லை.  2020இன் பின்னர் நான் தயாரித்த ஆடையை தற்போது ஜனாதிபதி அநுர அணிந்து செல்வதாக  உதய கம்மன்பில தெரிவித்தார்.  

Advertisement

Advertisement

Advertisement