• Sep 20 2024

மலையகத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் 'சமூக சமையலறை' வேலைத் திட்டம்!

Sharmi / Dec 28th 2022, 12:50 pm
image

Advertisement

ACT FOUNDATION ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக சமையலறை நாட்டின் பல பகுதிகளில் இயங்கி வரும் நிலையில்  மலையகத்திலும் தன் சேவையை தொடர ஆரம்பித்துள்ளது.

ஐந்து மாதமாக இயங்கி வரும் இச்சமூக சமையலறையில் தினந்தோறும் சராசரியாக  200 க்கும் மேற்பட்டவர்களுக்கான மதிய உணவை இலவசமாக வழங்கி வருகின்றது.

பண்டாரவளையை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக 13,000க்கும் மேற்பட்ட பகலுணவுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

 கொட்டகலை பகுதியில் அறநெறி பாடசாலை மற்றும் மாங்குளம் பண்டாரவளையில் வருமானம் குறைந்தவர்கள், முதியோர், விதவைகள் என அனைவரும் இச்சமூக சமையலறையின் மூலம் பயனடைகின்றதோடு தொடர்ந்தும்  நாட்டில் இன்னும் சில பகுதிகளில்  ACT FOUNDATION ஊடாக சமூக சமையலறையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் 'சமூக சமையலறை' வேலைத் திட்டம் ACT FOUNDATION ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக சமையலறை நாட்டின் பல பகுதிகளில் இயங்கி வரும் நிலையில்  மலையகத்திலும் தன் சேவையை தொடர ஆரம்பித்துள்ளது.ஐந்து மாதமாக இயங்கி வரும் இச்சமூக சமையலறையில் தினந்தோறும் சராசரியாக  200 க்கும் மேற்பட்டவர்களுக்கான மதிய உணவை இலவசமாக வழங்கி வருகின்றது.பண்டாரவளையை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக 13,000க்கும் மேற்பட்ட பகலுணவுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கொட்டகலை பகுதியில் அறநெறி பாடசாலை மற்றும் மாங்குளம் பண்டாரவளையில் வருமானம் குறைந்தவர்கள், முதியோர், விதவைகள் என அனைவரும் இச்சமூக சமையலறையின் மூலம் பயனடைகின்றதோடு தொடர்ந்தும்  நாட்டில் இன்னும் சில பகுதிகளில்  ACT FOUNDATION ஊடாக சமூக சமையலறையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement