• May 17 2024

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடு முடங்கும்...! SamugamMedia

Chithra / Mar 8th 2023, 12:51 pm
image

Advertisement

எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது;


எதிர்வரும் 9ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தொழில் வல்லுநர்கள் சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள், 13ஆம் திகதிக்கு பிறகு – அதாவது 9ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் – 13ஆம் திகதிக்கு பிறகு, இந்த 15 துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்களும் மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 15ம் திகதி இந்த நாடு முடங்கும், இந்த நாடு மூடப்படும்.. அணிவகுத்து நிற்கும் தொழிற்சங்கங்கள் உச்சகட்ட நடவடிக்கைக்கு பேரணியாக செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.- என்றார்.

நாளை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடு முடங்கும். SamugamMedia எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது;எதிர்வரும் 9ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பல தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தொழில் வல்லுநர்கள் சங்கத்தில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள், 13ஆம் திகதிக்கு பிறகு – அதாவது 9ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் – 13ஆம் திகதிக்கு பிறகு, இந்த 15 துறைகளைச் சேர்ந்த 40 தொழிற்சங்கங்களும் மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 15ம் திகதி இந்த நாடு முடங்கும், இந்த நாடு மூடப்படும். அணிவகுத்து நிற்கும் தொழிற்சங்கங்கள் உச்சகட்ட நடவடிக்கைக்கு பேரணியாக செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எதிர்வரும் 13ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமாக தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement