• Nov 23 2024

மயிலத்தமடுவில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!samugammedia

Sharmi / Jan 25th 2024, 6:56 am
image

மட்டக்களப்பு -  மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைக்கு தீர்வு கோரி சித்தாண்டியில் இடம்பெறும் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி செல்வி.தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பொலிஸாரின் வேண்டுகோளின் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி வருகையின்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக ஏறாவூர் பொலிஸாரினால் ஊடகவியலளார்கள் இருவர் உட்பட 37பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு  ஜனாதிபதியின் வருகையின் போது  கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை  மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் -  

நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்றையதினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடுவில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலை மாணவர்கள் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.samugammedia மட்டக்களப்பு -  மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைக்கு தீர்வு கோரி சித்தாண்டியில் இடம்பெறும் சுழற்சி முறையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி செல்வி.தர்சினி அன்னாத்துரை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது பொலிஸாரின் வேண்டுகோளின் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை மட்டக்களப்பு செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி வருகையின்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாக ஏறாவூர் பொலிஸாரினால் ஊடகவியலளார்கள் இருவர் உட்பட 37பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழங்கு எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு  ஜனாதிபதியின் வருகையின் போது  கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை  மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் -  நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்றையதினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement