வடக்கில் மாவீரர் நிகழ்வில் சிறுவர்களுக்கு போராளிகளை போல் ஆடையணிந்து, அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணிந்தமை முற்றிலும் வெறுத்தக்கத்ததொரு செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிரிக்கெட் தொடர்பில் மாத்திரம் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டை காட்டிலும் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் அந்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளரினால் மிக கொடுமையான நிலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்து மனவேதனையடைந்தேன்.
கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்கு குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் வடக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. போராளிகளை போல் ஆடையணிந்து அவர்களின் கழுத்தில் சைனட் குப்பிகளை அணிவிப்பதையும் காண முடிந்தது.
இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடு.
யுத்தக் காலத்தில் பல சிறுவர்கள் போராளிகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த நினைவுகளை மீட்கும் வகையில் செயற்படுவது முறையற்றது. என்றார்.
மாவீரர் நிகழ்வில் சிறுவர்களை போராளிகளாக காட்சிப்படுத்தியமை வெறுக்கத்தக்கது. - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விசனம் வடக்கில் மாவீரர் நிகழ்வில் சிறுவர்களுக்கு போராளிகளை போல் ஆடையணிந்து, அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணிந்தமை முற்றிலும் வெறுத்தக்கத்ததொரு செயற்பாடு என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கிரிக்கெட் தொடர்பில் மாத்திரம் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டை காட்டிலும் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.கல்முனை பகுதியில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் 15 வயது சிறுவன் அந்த நிலையத்தின் கட்டுப்பாட்டாளரினால் மிக கொடுமையான நிலையில் தாக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்து மனவேதனையடைந்தேன்.கடந்த மாதம் மாத்திரம் 16 வயதுக்கு குறைவான 131 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. கடந்த வாரம் வடக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. போராளிகளை போல் ஆடையணிந்து அவர்களின் கழுத்தில் சைனட் குப்பிகளை அணிவிப்பதையும் காண முடிந்தது. இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடு. யுத்தக் காலத்தில் பல சிறுவர்கள் போராளிகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்த நினைவுகளை மீட்கும் வகையில் செயற்படுவது முறையற்றது. என்றார்.