• Apr 30 2025

கிழக்கு மாகாணம் அழகையும் சிக்கலான தன்மையையும் பிரதிபலிக்கிறது! ஜஸ்டின் பொய்லற் சுட்டிக்காட்டு

Chithra / Apr 29th 2025, 3:44 pm
image

 

இன, மத சமூக மக்களின் பன்முகத்தன்மை கொண்ட கிழக்கு மாகாணம் இலங்கையின் அழகு மற்றும் அதன் சிக்கலான தன்மை இரண்டையும் பிரதிபலிக்கிறது என இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரத்தில் முதலாவது செயலாளர் ஜஸ்டின் பொய்லற் தெரிவித்தார்

இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தினால் நிதி அனுசரணை செய்யப்பட்ட  “சமூக மாற்றத்திற்காக இளைஞர்களை வலுப்படுத்துதல்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற முதலாவது ஆண்டு ஆராய்ச்சி கருத்தரங்கு நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றபோது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

பக்ற் எனப்படும் சமூக மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எழுதாக்குதல் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கில் பக்ற் நிறுவனத்தின் சமூக செயற்பாட்டாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளையோரால் சமூக அறிவியல், மனிதநேயம், புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கல்வி உள்ளிட்ட விடயங்கள் சமூகத்தில் காணப்படும் பல்வேறு சவால்கள் நிறைந்த விடயங்கள் ஆராயப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைவு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சர்வதேச உள்நாட்டு ஆய்வாளர்கள், துறைசார்ந்த கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், உட்பட இன்னும் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய சுவிஸ் தூதரக அரசியல் விவகாரத்தில் முதலாவது செயலாளர் ஜஸ்டின்,

இங்கு முக்கியமானது என்னவென்றால், இன, மத சமூகங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்தக் கிழக்கு மாகாணத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது.

கிழக்கு மாகாணம் இலங்கையின் அழகு, அதன் சிக்கலான தன்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது. அந்த சவால்களையும் அதன் நம்பிக்கைகளையும் புரிந்துகொள்பவர்களைப் போல ஆராய்ச்சி மற்றும் கொள்கைச் சிந்தனை இந்தப் பிராந்தியத்திலிருந்து வருவது சிறப்பம்சமாகும். இது அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த முதற்படியாகும்.

இந்த விடயத்திற்காக நீங்கள் நேரத்தையும் சக்தியையும் யோசனைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையான, அடிப்படை சவால்கள் மற்றும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகள் பற்றிய புரிதலின் மூலம் மட்டுமே உண்மையில் முக்கியமான கொள்கைகள் சாதகமான மாற்றத்தையும் கொண்டு வர முடியும், 

ஏனெனில் நீங்கள் இங்கு செய்த பணிகள் இந்த இலக்கை நோக்கிச் செல்ல ஒரு சிறந்த படியாகும், மேலும் கிழக்கு மாகாணத்தின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் பரிந்துரை மற்றும் உரையாடலுக்கான வலுவான ஆராய்ச்சி அடிப்படையிலான தளத்தை உருவாக்குவதே பக்ற் அமைப்பின் நோக்கமாக இருப்பதால், அந்நிறுவனம் இந்த நோக்கத்திற்காக வழிநடத்துவதைக் கண்டு நான் மிகவும் உற்சாகமடைகிறேன். இந்த முயற்சியை ஆதரித்த சுவிற்ஸர்லர்நது தூதரகத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன். என்றார்.

நிகழ்வில், ஆய்வில் பங்கேற்றிருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள். ஆய்வாளர்கள், துறைசார்ந்த கல்வியாளர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அங்கீகார விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் சிரேஷ்ட தேசிய நிகழ்ச்சித் திட்ட அலுவலர் சுசாந்தி கோபாலகிருஷ்ணன், ஜேர்மனி. டியூபிங்கன் பல்கலைக்கழகம், சமூக, கலாச்சார மானுடவியல் துறை பேராசிரியர் பொன்னி அரசு உட்பட பல துறைசார் புலமையாளர்கள் கலந்து கொண்டனர்.


கிழக்கு மாகாணம் அழகையும் சிக்கலான தன்மையையும் பிரதிபலிக்கிறது ஜஸ்டின் பொய்லற் சுட்டிக்காட்டு  இன, மத சமூக மக்களின் பன்முகத்தன்மை கொண்ட கிழக்கு மாகாணம் இலங்கையின் அழகு மற்றும் அதன் சிக்கலான தன்மை இரண்டையும் பிரதிபலிக்கிறது என இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரத்தில் முதலாவது செயலாளர் ஜஸ்டின் பொய்லற் தெரிவித்தார்இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தினால் நிதி அனுசரணை செய்யப்பட்ட  “சமூக மாற்றத்திற்காக இளைஞர்களை வலுப்படுத்துதல்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற முதலாவது ஆண்டு ஆராய்ச்சி கருத்தரங்கு நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றபோது அவர் இக்கருத்தை வெளியிட்டார்.பக்ற் எனப்படும் சமூக மாற்றத்திற்கான நடவடிக்கைகளை எழுதாக்குதல் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சிக் கருத்தரங்கில் பக்ற் நிறுவனத்தின் சமூக செயற்பாட்டாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளையோரால் சமூக அறிவியல், மனிதநேயம், புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கல்வி உள்ளிட்ட விடயங்கள் சமூகத்தில் காணப்படும் பல்வேறு சவால்கள் நிறைந்த விடயங்கள் ஆராயப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது.தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கூட்டிணைவு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சர்வதேச உள்நாட்டு ஆய்வாளர்கள், துறைசார்ந்த கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள், உட்பட இன்னும் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடர்ந்து உரையாற்றிய சுவிஸ் தூதரக அரசியல் விவகாரத்தில் முதலாவது செயலாளர் ஜஸ்டின்,இங்கு முக்கியமானது என்னவென்றால், இன, மத சமூகங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்தக் கிழக்கு மாகாணத்தில் இந்த நிகழ்வு நடக்கிறது.கிழக்கு மாகாணம் இலங்கையின் அழகு, அதன் சிக்கலான தன்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது. அந்த சவால்களையும் அதன் நம்பிக்கைகளையும் புரிந்துகொள்பவர்களைப் போல ஆராய்ச்சி மற்றும் கொள்கைச் சிந்தனை இந்தப் பிராந்தியத்திலிருந்து வருவது சிறப்பம்சமாகும். இது அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த முதற்படியாகும்.இந்த விடயத்திற்காக நீங்கள் நேரத்தையும் சக்தியையும் யோசனைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.உண்மையான, அடிப்படை சவால்கள் மற்றும் மக்களுக்கு மிகவும் முக்கியமான பிரச்சினைகள் பற்றிய புரிதலின் மூலம் மட்டுமே உண்மையில் முக்கியமான கொள்கைகள் சாதகமான மாற்றத்தையும் கொண்டு வர முடியும், ஏனெனில் நீங்கள் இங்கு செய்த பணிகள் இந்த இலக்கை நோக்கிச் செல்ல ஒரு சிறந்த படியாகும், மேலும் கிழக்கு மாகாணத்தின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் பரிந்துரை மற்றும் உரையாடலுக்கான வலுவான ஆராய்ச்சி அடிப்படையிலான தளத்தை உருவாக்குவதே பக்ற் அமைப்பின் நோக்கமாக இருப்பதால், அந்நிறுவனம் இந்த நோக்கத்திற்காக வழிநடத்துவதைக் கண்டு நான் மிகவும் உற்சாகமடைகிறேன். இந்த முயற்சியை ஆதரித்த சுவிற்ஸர்லர்நது தூதரகத்தைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று நான் கூற விரும்புகிறேன். என்றார்.நிகழ்வில், ஆய்வில் பங்கேற்றிருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள். ஆய்வாளர்கள், துறைசார்ந்த கல்வியாளர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அங்கீகார விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் சிரேஷ்ட தேசிய நிகழ்ச்சித் திட்ட அலுவலர் சுசாந்தி கோபாலகிருஷ்ணன், ஜேர்மனி. டியூபிங்கன் பல்கலைக்கழகம், சமூக, கலாச்சார மானுடவியல் துறை பேராசிரியர் பொன்னி அரசு உட்பட பல துறைசார் புலமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement