• Jun 14 2024

‘துணிவு’ முழு படமும் ஓடிடியில் வெளியாகும்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

keerthana / Jan 14th 2023, 12:54 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான அஜித்,எச்.வினோத் இயக்கத்தில்,  ‘துணிவு’ ஜனவரி 11 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் சூப்பரா கலக்கி வருகிறது. 

தற்போது  3-ம் நாள் முடிவில் ரூ.100 கோடி கிட்ட நெருங்கியதாக சொல்லப்படுகிறது.



இந்நிலையில், துணிவு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வரலாம் என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார். மேலும், இப்படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்காக சில காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒருவேளை படத்தின் முழு வெர்ஷனும் ஓடிடி ரிலீஸாகலாம் என்றும் மேலும்  அவர் தெரிவித்துள்ளார்.

அந்த  வகையில், துணிவு ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால், இதில் நீக்கப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக வர வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.



அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், இயக்குநர் H.வினோத்துடன் தனது 3 ஆவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சமூக செய்தியை வழங்கி வெற்றி பெற்றுள்ளார் அஜித் என்றே சொல்ல வேண்டும்.




‘துணிவு’ முழு படமும் ஓடிடியில் வெளியாகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான அஜித்,எச்.வினோத் இயக்கத்தில்,  ‘துணிவு’ ஜனவரி 11 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் சூப்பரா கலக்கி வருகிறது. தற்போது  3-ம் நாள் முடிவில் ரூ.100 கோடி கிட்ட நெருங்கியதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில், துணிவு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வரலாம் என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார். மேலும், இப்படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்காக சில காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும் ஒருவேளை படத்தின் முழு வெர்ஷனும் ஓடிடி ரிலீஸாகலாம் என்றும் மேலும்  அவர் தெரிவித்துள்ளார்.அந்த  வகையில், துணிவு ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதால், இதில் நீக்கப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக வர வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.அதிரடி காட்சிகளால் நிரம்பிய, அஜித்தின் ‘துணிவு’ ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் H.வினோத்துடன் தனது 3 ஆவது படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சமூக செய்தியை வழங்கி வெற்றி பெற்றுள்ளார் அஜித் என்றே சொல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement