• Jun 22 2024

இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இடையில் இடம் பெற்ற விவாத போட்டி!

Tamil nila / Jun 13th 2024, 8:48 pm
image

Advertisement

இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கு 'சுத்தமான குடி நீரை பெற்றுக் கொடுத்தல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID இன் அனுசரணையுடன்  இயங்கி வருகிறது.

இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களிடையே மழைநீர் சேகரிப்பின்  முக்கியத்துவத்தை அறிவூட்டும் முகமாக  மழைநீர் சேகரிப்பு தொடர்பான விவாதப் போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கமைவாக வடமாகாணத்தின் மன்னார்  மாவட்டங்களிலிருந்து மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் மூலம் பயனடைந்த பாடசாலை மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கு இடையிலான முதலாம் சுற்று விவாதப் போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை முருங்கனில் அமைந்துள்ள ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது .

நிகழ்வில் இலங்கை மழைநீர் சேகரிப்பு ஒன்றிய உத்தியோகத்தர்கள், வலய கல்வி உத்தியோகத்தர்கள்  மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

அடுத்த சுற்று போட்டிகளும் இடம் பெறவுள்ள தோடு முதல் சுற்றில் பங்குபற்றிய 12 அணிகளில் இரண்டாம் சுற்றுக்கு ஆறு அணிகள் தெரிவு செய்யப்பட்டன.

இன்றைய போட்டியில் பங்குபற்றிய  மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இடையில் இடம் பெற்ற விவாத போட்டி இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அந்த வகையில் தற்போது இலங்கையில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் பிரதேச மக்களுக்கு 'சுத்தமான குடி நீரை பெற்றுக் கொடுத்தல்' எனும் செயற்றிட்டத்தின் கீழ் USAID இன் அனுசரணையுடன்  இயங்கி வருகிறது.இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களிடையே மழைநீர் சேகரிப்பின்  முக்கியத்துவத்தை அறிவூட்டும் முகமாக  மழைநீர் சேகரிப்பு தொடர்பான விவாதப் போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது.அதற்கமைவாக வடமாகாணத்தின் மன்னார்  மாவட்டங்களிலிருந்து மழைநீர் சேகரிப்பு தாங்கிகள் மூலம் பயனடைந்த பாடசாலை மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கு இடையிலான முதலாம் சுற்று விவாதப் போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை முருங்கனில் அமைந்துள்ள ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது .நிகழ்வில் இலங்கை மழைநீர் சேகரிப்பு ஒன்றிய உத்தியோகத்தர்கள், வலய கல்வி உத்தியோகத்தர்கள்  மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்அடுத்த சுற்று போட்டிகளும் இடம் பெறவுள்ள தோடு முதல் சுற்றில் பங்குபற்றிய 12 அணிகளில் இரண்டாம் சுற்றுக்கு ஆறு அணிகள் தெரிவு செய்யப்பட்டன.இன்றைய போட்டியில் பங்குபற்றிய  மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement