பளையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இ.போ.ச பேருந்து நடத்துனர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி டிப்போவிற்கு செல்லும் பொருட்டு இன்று காலை(08) இ.போ.ச பேருந்தின் நடத்துனர் ஒருவர் மீசாலையில் இருந்து கண்டி பேருந்து ஒன்றில் ஏறி கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் குறித்த பேருந்து பளை பஸ் தரிப்பு நிலையத்தில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பேருந்தின் மிதிபலகையில் நின்ற மீசாலையைச் சேர்ந்த குறித்த நடத்துனர் பேருந்திலிருந்து இறங்கி நின்றபோது பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்த முற்பட்டவேளை குறித்த நடத்துநரின் காலின் மேல் ஏறி கால் நசிந்துள்ளது.
இந்நிலையில் காலில் படுகாயமடைந்த நடத்துனர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்து பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நடத்துனரின் காலின் மேல் ஏறிய இ.போ.ச பேருந்து. பளையில் விபரீதம்.samugammedia பளையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இ.போ.ச பேருந்து நடத்துனர் படுகாயமடைந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி டிப்போவிற்கு செல்லும் பொருட்டு இன்று காலை(08) இ.போ.ச பேருந்தின் நடத்துனர் ஒருவர் மீசாலையில் இருந்து கண்டி பேருந்து ஒன்றில் ஏறி கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் குறித்த பேருந்து பளை பஸ் தரிப்பு நிலையத்தில் பயணிகளை இறக்குவதற்காக நிறுத்தப்பட்டது.இந்நிலையில் பேருந்தின் மிதிபலகையில் நின்ற மீசாலையைச் சேர்ந்த குறித்த நடத்துனர் பேருந்திலிருந்து இறங்கி நின்றபோது பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்த முற்பட்டவேளை குறித்த நடத்துநரின் காலின் மேல் ஏறி கால் நசிந்துள்ளது.இந்நிலையில் காலில் படுகாயமடைந்த நடத்துனர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.குறித்த பேருந்து பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.