• May 20 2024

'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்...!samugammedia

Sharmi / May 10th 2023, 10:31 am
image

Advertisement

'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி'  வரலாற்றை இளைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்  செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றையதினம்(09) காலை ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து யாழின் பல பகுதிகளிலும் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.

இன்று காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதோடு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பொதுமக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்று ஒரு பிடி அரிசி பெற்று அதனை திரட்டி கஞ்சி காய்ச்சப்பட்டு கொண்டிருக்கின்றது.

தொடர்ச்சியாக 11 மணியளவில் முல்லை புதுக்குயிருப்பு மண்ணில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி' பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்.samugammedia 'வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி'  வரலாற்றை இளைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்  செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றையதினம்(09) காலை ஆரம்பமானது.அதனைத் தொடர்ந்து யாழின் பல பகுதிகளிலும் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.இன்று காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதோடு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பொதுமக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்று ஒரு பிடி அரிசி பெற்று அதனை திரட்டி கஞ்சி காய்ச்சப்பட்டு கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியாக 11 மணியளவில் முல்லை புதுக்குயிருப்பு மண்ணில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement