• May 19 2024

மனிதப் புதைகுழி அகழ்வு முறைப்படி செய்யப்பட்டவில்லை! – சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு samugammedia

Chithra / Jul 7th 2023, 6:46 am
image

Advertisement

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நாங்கள் அவதானித்தபடி, முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மனித புதைகுழி அகழப்படும் பகுதிக்கு நேற்று  விஜயம் மேற்கொண்டு மனித புதைகுழி அகழப்படுவதை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இது செய்யப்படவில்லை. பல சான்றுகள் காணாமல்போவதற்கான ஆபத்துக்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு முக்கியமான சாட்சியமாக காணப்படுகின்றது. போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவமாக இது இருக்கவேண்டும், இராணுவ சீருடையை ஒத்த அல்லது தமிழீழ சீருடையை போன்ற பல காணப்படுகின்றன, விசேடமாக பெண் போராளிகளுடைய உடல்களாக இவை இருக்கவேண்டும்.

தற்போது ஆண் ஒருவரினது உடலும் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது போல தென்படுகின்ற போது அதனை மிகவும் அவதானமாக அந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யவேண்டும்.

அப்படி செய்யாமல் இதனை அந்த அந்த நேரத்திற்கு ஏற்ப செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமில்லை, சர்வதேச நிபுணத்துவத்தின் மேற்பார்வையில் இது செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


மனிதப் புதைகுழி அகழ்வு முறைப்படி செய்யப்பட்டவில்லை – சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு samugammedia கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நாங்கள் அவதானித்தபடி, முறைப்படி செய்யப்படுவதாக தெரியவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.மனித புதைகுழி அகழப்படும் பகுதிக்கு நேற்று  விஜயம் மேற்கொண்டு மனித புதைகுழி அகழப்படுவதை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஒரு சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் இது செய்யப்படவில்லை. பல சான்றுகள் காணாமல்போவதற்கான ஆபத்துக்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.இது ஒரு முக்கியமான சாட்சியமாக காணப்படுகின்றது. போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவமாக இது இருக்கவேண்டும், இராணுவ சீருடையை ஒத்த அல்லது தமிழீழ சீருடையை போன்ற பல காணப்படுகின்றன, விசேடமாக பெண் போராளிகளுடைய உடல்களாக இவை இருக்கவேண்டும்.தற்போது ஆண் ஒருவரினது உடலும் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.எனவே உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது போல தென்படுகின்ற போது அதனை மிகவும் அவதானமாக அந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர்களுடன் சேர்ந்து செய்யவேண்டும்.அப்படி செய்யாமல் இதனை அந்த அந்த நேரத்திற்கு ஏற்ப செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமில்லை, சர்வதேச நிபுணத்துவத்தின் மேற்பார்வையில் இது செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement