• May 13 2024

யாழில் நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது! வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் காட்டம்!

Chithra / Dec 12th 2023, 9:37 am
image

Advertisement

யாழில் டிஜே நைற் என்ற பெயரில் நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று யாழிலுள்ள விடுதியில் நடாத்தப்பட்டுள்ளது. 

கடும் எதிர்ப்புகள் வந்த போதும் யாழ் மாநகர சபையின் அனுமதியையும் மீறி டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வு மீளவும் நடத்தப்பட்டதாக அறிகிறோம்.

இவ்வாறாக சமூகத்தை சீரழித்து வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டிய சூழல் வரும்.

குறித்த நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு. 

இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும்.அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்.

குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும். மிகவிரைவில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம்- என்றார்.

மேலும் வடக்கு கிழக்கில் சுற்றுலா என்ற போர்வையில் மதுபான விற்பனை நிலையங்களை அரசாங்கம் ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

உடுப்பிட்டியில் மக்கள் செறிவுள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது.

ஆறு வருடங்களுக்கு முன்னரும் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு பல சமூக சீரழிவுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் போராட்டம் செய்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட்டது. 

இரண்டாம் தடவையாக கொண்டுவர முயற்சித்தும் அது முடியாத நிலையில் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்ட மதுபான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அதில் தலையிட்டு அதை திறந்து வைக்க உத்தரவிட்டார். 

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.

யாழில் நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் காட்டம் யாழில் டிஜே நைற் என்ற பெயரில் நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.மேலும் டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று யாழிலுள்ள விடுதியில் நடாத்தப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புகள் வந்த போதும் யாழ் மாநகர சபையின் அனுமதியையும் மீறி டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வு மீளவும் நடத்தப்பட்டதாக அறிகிறோம்.இவ்வாறாக சமூகத்தை சீரழித்து வருமானம் உழைப்பதை இவர்கள் கைவிடவேண்டும். இதற்கு எதிராக நாம் போராட வேண்டிய சூழல் வரும்.குறித்த நிகழ்வுக்கு யாழ் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு. இதற்கு எதிராக மாநகர சபை நடவடிக்கை எடுக்க முடியும்.அனுமதியின்றி நடாத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்கு தொடர வேண்டும்.குறித்த விடயத்தில் சமூக நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு எமது எதிர்ப்பை காட்டவேண்டும். மிகவிரைவில் இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம்- என்றார்.மேலும் வடக்கு கிழக்கில் சுற்றுலா என்ற போர்வையில் மதுபான விற்பனை நிலையங்களை அரசாங்கம் ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதுஉடுப்பிட்டியில் மக்கள் செறிவுள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது.ஆறு வருடங்களுக்கு முன்னரும் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு பல சமூக சீரழிவுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் போராட்டம் செய்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட்டது. இரண்டாம் தடவையாக கொண்டுவர முயற்சித்தும் அது முடியாத நிலையில் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்ட மதுபான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அதில் தலையிட்டு அதை திறந்து வைக்க உத்தரவிட்டார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement