• Nov 28 2024

உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிய விரைவு ரயில்...! குடும்பஸ்தர் பரிதாப மரணம்...!

Sharmi / May 14th 2024, 10:54 am
image

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு புகையிரதமொன்று, கொஸ்கொட துவேமோதர புகையிரத கடவையில் உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பெந்தோட்டை உள்ளூராட்சி சபையின் ஊழியரும் இந்துருவ பிரதேசத்தை சேர்ந்தவருமான திலக் குமாரசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், உழவு இயந்திரத்தின் பின்னால் சென்ற இருவர் ரயில் வந்தவுடன் உழவு இயந்திரத்தில் இருந்து குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

அதேவேளை குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் உள்ள பாதுகாப்பு தானியங்கி ஒலிகள் மற்றும் விளக்குகள் ஒழுங்கான முறையில் இயங்குவதில்லை எனவும் அப்பகுதி மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

உழவு இயந்திரத்தை மோதித் தள்ளிய விரைவு ரயில். குடும்பஸ்தர் பரிதாப மரணம். பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு புகையிரதமொன்று, கொஸ்கொட துவேமோதர புகையிரத கடவையில் உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பெந்தோட்டை உள்ளூராட்சி சபையின் ஊழியரும் இந்துருவ பிரதேசத்தை சேர்ந்தவருமான திலக் குமாரசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.அதேவேளை உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், உழவு இயந்திரத்தின் பின்னால் சென்ற இருவர் ரயில் வந்தவுடன் உழவு இயந்திரத்தில் இருந்து குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.அதேவேளை குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் உள்ள பாதுகாப்பு தானியங்கி ஒலிகள் மற்றும் விளக்குகள் ஒழுங்கான முறையில் இயங்குவதில்லை எனவும் அப்பகுதி மக்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement