• May 20 2024

கல்வியங்காட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணம்..! செய்தி வெளியிட்ட சமூகம் ஊடக நிறுவனம் மீது பொலிஸார் விசாரணை..!samugammedia

Sharmi / Aug 8th 2023, 2:37 pm
image

Advertisement

யாழ். கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட சமூகம் ஊடக நிறுவனத்தை  விசாரணைக்கு வருமாறு யாழ்.பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

கல்வியங்காடு பகுதியில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி
சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

தொடர்ந்து எமது சமூகம் குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஊருக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செய்தியை பிரசுரித்திருந்தோம்.

இந்நிலையில் இச்செய்தி வெளியீட்டினால் தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது என  திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் வழங்கியுள்ள முறைப்பாட்டின் பிரகாரம் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு யாழ். பொலிஸார் அழைப்பு வழங்கியுள்ளனர்.

கல்வியங்காட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமி மரணம். செய்தி வெளியிட்ட சமூகம் ஊடக நிறுவனம் மீது பொலிஸார் விசாரணை.samugammedia யாழ். கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட சமூகம் ஊடக நிறுவனத்தை  விசாரணைக்கு வருமாறு யாழ்.பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.கல்வியங்காடு பகுதியில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற 17 வயதுடைய சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்தமை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.தொடர்ந்து எமது சமூகம் குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஊருக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களை உள்வாங்கி செய்தியை பிரசுரித்திருந்தோம். இந்நிலையில் இச்செய்தி வெளியீட்டினால் தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது என  திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவர் வழங்கியுள்ள முறைப்பாட்டின் பிரகாரம் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ். பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு யாழ். பொலிஸார் அழைப்பு வழங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement