• May 03 2024

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி..! நாய்க்கடி ஊசி போட்ட தாதியர்..!samugammedia

Sharmi / Jun 29th 2023, 10:25 am
image

Advertisement

சளி காரணமாக மருத்துவமனைக்கு  சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவருக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

அங்கு, சளிக்கு சிகிச்சை பெற சென்ற சாதனா என்ற  சிறுமிக்கே  தாதியர்கள்  நாய்க்கடி ஊசியினை போட்டுள்ளனர்.

அதனால், சிறுமி  திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ள நிலையில் அதற்கான சிகிச்சையும் பெற்று வருகின்றார்.

இது குறித்து தாதியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு  சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர், மகளிற்கு உடல்நிலை சரியில்லாமையால் சிகிச்சைக்காக  கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பரிசோதித்த வைத்தியர் மகளுக்கு சளி பிரச்சினை உள்ளதாக கூறி  ஊசி போடவும், மாத்திரைக்கும் சீட்டு எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து,  அந்த சீட்டை பெற்றுக்கொண்டு மாத்திரை வாங்கிய பின்னர் ஊசி போடும் இடத்திற்கு சென்ற நிலையில்  அங்கிருந்த தாதியர்கள்   சீட்டை வாங்கி பார்க்காது மகளுக்கு 2 ஊசி போட்டதால்  எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று தான் வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறியமையால்  தனது  மகளுக்கு சளி பிரச்சினை என்று தான் கூறிய வேளை தாதியர் மலுப்பலாக பதில் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

அதற்கிடையில்,  தனது மகளிற்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை  உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளதாகவும் ஆகவே அலட்சியமாக சிகிச்சையளித்த தாதியர் மற்றும்  பணியில் இருந்த வைத்தியர் மற்றும்  கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி. நாய்க்கடி ஊசி போட்ட தாதியர்.samugammedia சளி காரணமாக மருத்துவமனைக்கு  சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவருக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. அங்கு, சளிக்கு சிகிச்சை பெற சென்ற சாதனா என்ற  சிறுமிக்கே  தாதியர்கள்  நாய்க்கடி ஊசியினை போட்டுள்ளனர். அதனால், சிறுமி  திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ள நிலையில் அதற்கான சிகிச்சையும் பெற்று வருகின்றார். இது குறித்து தாதியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு  சிறுமியின் தந்தை பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் அவர், மகளிற்கு உடல்நிலை சரியில்லாமையால் சிகிச்சைக்காக  கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பரிசோதித்த வைத்தியர் மகளுக்கு சளி பிரச்சினை உள்ளதாக கூறி  ஊசி போடவும், மாத்திரைக்கும் சீட்டு எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதையடுத்து,  அந்த சீட்டை பெற்றுக்கொண்டு மாத்திரை வாங்கிய பின்னர் ஊசி போடும் இடத்திற்கு சென்ற நிலையில்  அங்கிருந்த தாதியர்கள்   சீட்டை வாங்கி பார்க்காது மகளுக்கு 2 ஊசி போட்டதால்  எதற்காக 2 ஊசி போடுகிறீர்கள் என்று தான் வினவியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர், நாய் கடித்தால் 2 ஊசி தான் போட வேண்டும் என்று கூறியமையால்  தனது  மகளுக்கு சளி பிரச்சினை என்று தான் கூறிய வேளை தாதியர் மலுப்பலாக பதில் வழங்கியதாகவும் கூறியுள்ளார். அதற்கிடையில்,  தனது மகளிற்கு மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை  உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளதாகவும் ஆகவே அலட்சியமாக சிகிச்சையளித்த தாதியர் மற்றும்  பணியில் இருந்த வைத்தியர் மற்றும்  கண்காணிப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement