• Nov 21 2024

தொழில்சார் கல்வி மட்டுமல்ல துறைசார் மனித விருத்தியை மேம்படுத்துவதே இலக்கு...! கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டு...!samugammedia

Sharmi / Feb 6th 2024, 10:10 am
image

தொழில் சார் கல்வி மட்டுமல்ல துறைசார் மனித விருத்தியை மேம்படுத்துவதே இலக்கு என அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்வி மாத்திரம் அல்ல. கல்வியுடன் தொழில் கல்வி, திறண் விருத்தி, ஆராய்ச்சி உள்ளிட்ட விடயங்களை ஊக்குவிப்பதே எமது இலக்கு. அதற்காகவே இந்த விஜயமாக அமைகிறது.

ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் இடம்பெறும் பயிற்சிகள் தரத்தில் உயர்ந்துள்ளது. 

மிக சிறந்த தொழில் மற்றும் திறன் விருத்தி கல்விகள் இடம்பெறுவதை காண்கிறேன்.

அதற்கான உதவிகளையும், திட்டங்களையும் துணையாக தாங்கும் ஜேர்மன் நாட்டுக்கும், தூதரகத்துக்கும் நன்றி. அத்துடன் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளையும் பாராட்ட வேண்டும்.

இங்கு தொழில்சார் கல்வியை மட்டுமல்ல. ஆங்கிலம் உள்ளிட்ட திறன்விருத்தி கல்வியையும் தொடர்கின்றீர்கள். இங்கு கல்வி கற்கும் நீங்கள் திறன்களை வளர்த்தவர்களாக வெளியேற வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. பல்கலைக்கழக கல்வி, தொழில்சார் கல்வி மட்டுமல்ல. திறன்விருத்தி உள்ளிட்ட ஆளுமைகளை அடைந்து புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

இங்கு அதிக குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இங்கு மட்டுமல்ல கொழும்பிலும் குறைவுகள் காணப்படுகிறது. அவற்றை நிறைவு செய்ய உள்ளோம். நீங்கள் எமது முன்னே உள்ளவர்களைப் போல வளர்ந்து இவற்றை நிறைவு செய்யக்கூடியதாக வளர்ந்து முன்வர வேண்டும்.

ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின்  கல்வியில் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விடயம் தொடர்பில் நிறுவன ஊழியர்கள், ஜேர்மன் தூதரகத்தினருடன் பேசியுள்ளோம். எதிர்வரும் காலங்களில் உயரிய சான்றிதழ்களுடனான கல்வியை தொடர முடியும்.

அதனால் நல்ல தொழில் துறையை மேம்படுத்த முடியும் என்பதுடன், திறன்களையும் விருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 


தொழில்சார் கல்வி மட்டுமல்ல துறைசார் மனித விருத்தியை மேம்படுத்துவதே இலக்கு. கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டு.samugammedia தொழில் சார் கல்வி மட்டுமல்ல துறைசார் மனித விருத்தியை மேம்படுத்துவதே இலக்கு என அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,கல்வி மாத்திரம் அல்ல. கல்வியுடன் தொழில் கல்வி, திறண் விருத்தி, ஆராய்ச்சி உள்ளிட்ட விடயங்களை ஊக்குவிப்பதே எமது இலக்கு. அதற்காகவே இந்த விஜயமாக அமைகிறது.ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின் மூலம் இடம்பெறும் பயிற்சிகள் தரத்தில் உயர்ந்துள்ளது. மிக சிறந்த தொழில் மற்றும் திறன் விருத்தி கல்விகள் இடம்பெறுவதை காண்கிறேன்.அதற்கான உதவிகளையும், திட்டங்களையும் துணையாக தாங்கும் ஜேர்மன் நாட்டுக்கும், தூதரகத்துக்கும் நன்றி. அத்துடன் இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளையும் பாராட்ட வேண்டும்.இங்கு தொழில்சார் கல்வியை மட்டுமல்ல. ஆங்கிலம் உள்ளிட்ட திறன்விருத்தி கல்வியையும் தொடர்கின்றீர்கள். இங்கு கல்வி கற்கும் நீங்கள் திறன்களை வளர்த்தவர்களாக வெளியேற வேண்டும்.புதிய கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. பல்கலைக்கழக கல்வி, தொழில்சார் கல்வி மட்டுமல்ல. திறன்விருத்தி உள்ளிட்ட ஆளுமைகளை அடைந்து புதிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.இங்கு அதிக குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இங்கு மட்டுமல்ல கொழும்பிலும் குறைவுகள் காணப்படுகிறது. அவற்றை நிறைவு செய்ய உள்ளோம். நீங்கள் எமது முன்னே உள்ளவர்களைப் போல வளர்ந்து இவற்றை நிறைவு செய்யக்கூடியதாக வளர்ந்து முன்வர வேண்டும்.ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தின்  கல்வியில் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இவ்விடயம் தொடர்பில் நிறுவன ஊழியர்கள், ஜேர்மன் தூதரகத்தினருடன் பேசியுள்ளோம். எதிர்வரும் காலங்களில் உயரிய சான்றிதழ்களுடனான கல்வியை தொடர முடியும்.அதனால் நல்ல தொழில் துறையை மேம்படுத்த முடியும் என்பதுடன், திறன்களையும் விருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement