• Apr 27 2024

IMF முன்வைத்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்த அரசு!

IMF
Chithra / Jan 24th 2023, 6:38 pm
image

Advertisement

சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால்

நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ.த சில்வா தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தவணையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கான பொறிமுறையினை நடைமுறைப்படுத்தும்போது காணப்படும் கடுமையான சமூகத தாக்கங்கள் குறித்தும் அரசாங்க நிதிபற்றிய குழு வினவியது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கையாக இருப்பதாகவும், அந்த விளைவுகளை நிராகரிப்பதற்கு

செலவின உச்சவரம்புகள் போன்ற சில பாதுகாப்புக்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் மத்திய வங்கி பதிலளித்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைத்துள்ள சீர்திருத்தங்களுக்கு இருதரப்பு ஆதரவை வழங்குதற்கு உறுதியுடன் இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

IMF முன்வைத்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்த அரசு சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால்நடைமுறைப்படுத்தப்படும் மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்க நிதி பற்றிய குழுவின் நோக்கமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ.த சில்வா தெரிவித்தார்.2023 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தவணையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்புவதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தே அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றுவதற்கான பொறிமுறையினை நடைமுறைப்படுத்தும்போது காணப்படும் கடுமையான சமூகத தாக்கங்கள் குறித்தும் அரசாங்க நிதிபற்றிய குழு வினவியது. பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கையாக இருப்பதாகவும், அந்த விளைவுகளை நிராகரிப்பதற்குசெலவின உச்சவரம்புகள் போன்ற சில பாதுகாப்புக்களைப் பயன்படுத்தியிருப்பதாகவும் மத்திய வங்கி பதிலளித்தது. சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைத்துள்ள சீர்திருத்தங்களுக்கு இருதரப்பு ஆதரவை வழங்குதற்கு உறுதியுடன் இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement