சிலாபம் - ஆனமடுவ வீதியில் பல்லம, பிரதேசத்தில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
மாதம்பை, தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஏ.இந்திரா எனும் திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதுடன்,
அவரது கணவரான 32 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான கெப் வண்டி சிலாபத்தில் இருந்து ஆனமடுவ நோக்கி சென்ற போது முன்னால் வந்த தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தின்போது பெண் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.
குறித்த தம்பதியினர் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அட்டபாகே, பிடகம பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண வீட்டிற்கு சென்ற தம்பதிக்கு காத்திருந்த துயரம்; மனைவி பலி - கணவன் படுகாயம் சிலாபம் - ஆனமடுவ வீதியில் பல்லம, பிரதேசத்தில் கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் பெண் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.இவ் விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.மாதம்பை, தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஏ.இந்திரா எனும் திருமணமான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவரான 32 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துக்குள்ளான கெப் வண்டி சிலாபத்தில் இருந்து ஆனமடுவ நோக்கி சென்ற போது முன்னால் வந்த தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.விபத்தின்போது பெண் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.குறித்த தம்பதியினர் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அட்டபாகே, பிடகம பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடையவராவார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.