• Nov 26 2024

மலையக தமிழ் சமூகத்தை தனியான இனக் குழுமமாக அங்கீகரிக்க வேண்டும்- ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ்..!

Sharmi / Sep 13th 2024, 8:23 am
image

மலையக தமிழ் சமூகத்தை தனியான இனக் குழும்பமாக அங்கரிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் தெரிவித்தார்.

இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளர் மயிவாகனம் திலக்கராஜா நேற்றையதினம் (12) புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்ததுடன், உடப்பு ஸ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உடப்பில் இருந்து எனது தேர்தல் பிரச்சார பணியை ஆரம்பித்து இருக்கிறேன். ஐந்து நாட்களில் ஒன்பது மாகாணங்களுக்கு செல்லவும் எண்ணியிருக்கிறேன்.

மலையகம் 200 என பரவலாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தான் இங்கே இந்தியா வம்சாவளி மக்களும் இருக்கின்றார்கள். அவர்களும் இங்கு வாழ்கிறார்கள என்பதற்கு இந்த ஆலயம் அதனை பறைசாற்றுகின்றது.

இலங்கை மலையக தமிழர் என்பதை முன்நிறுத்துவதற்காக  நான் இந்தியா வம்சாவளியினருக்கு எதிரானவன் அல்லது இந்தியாவுக்கு எதிரானவன் எனக் காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இதனை நான் முழுமையாக மறுக்கின்றேன்.

இந்தியா வம்சாவளி வேறு இந்திய தமிழர் என்பது வேறு. இலங்கை மலையக தமிழர் என்பது வேறு . இந்த வேறுபாட்டை மிகத் தெளிவாக அர்த்தமுள்ள பிரஜையாகள் என்ற கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

இந்திய வம்சாவளிகளை இலங்கையில் ஒரு இனக் குழும்பமாக அங்கீகரிக்கின்ற அதே நேரம்  இலங்கை மலையக தமிழ் சமூகத்தை தனியான இனக் குழும்பமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது எனது முன்மொழிவாகும்.

அதற்கான விஞ்ஞான முறையான விளக்கத்தை நான் எந்த மேடையிலும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன்.

அதற்கான அதாரங்களில் ஒன்று தான் இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களாகும் என்றார்.


மலையக தமிழ் சமூகத்தை தனியான இனக் குழுமமாக அங்கீகரிக்க வேண்டும்- ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ். மலையக தமிழ் சமூகத்தை தனியான இனக் குழும்பமாக அங்கரிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் திலகராஜ் தெரிவித்தார்.இலங்கை மலையகத் தமிழ் மக்களின் ஜனாதிபதி வேட்பாளர் மயிவாகனம் திலக்கராஜா நேற்றையதினம் (12) புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்ததுடன், உடப்பு ஸ்ரீ வீரபத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டார்.இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.உடப்பில் இருந்து எனது தேர்தல் பிரச்சார பணியை ஆரம்பித்து இருக்கிறேன். ஐந்து நாட்களில் ஒன்பது மாகாணங்களுக்கு செல்லவும் எண்ணியிருக்கிறேன்.மலையகம் 200 என பரவலாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் தான் இங்கே இந்தியா வம்சாவளி மக்களும் இருக்கின்றார்கள். அவர்களும் இங்கு வாழ்கிறார்கள என்பதற்கு இந்த ஆலயம் அதனை பறைசாற்றுகின்றது.இலங்கை மலையக தமிழர் என்பதை முன்நிறுத்துவதற்காக  நான் இந்தியா வம்சாவளியினருக்கு எதிரானவன் அல்லது இந்தியாவுக்கு எதிரானவன் எனக் காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இதனை நான் முழுமையாக மறுக்கின்றேன்.இந்தியா வம்சாவளி வேறு இந்திய தமிழர் என்பது வேறு. இலங்கை மலையக தமிழர் என்பது வேறு . இந்த வேறுபாட்டை மிகத் தெளிவாக அர்த்தமுள்ள பிரஜையாகள் என்ற கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.இந்திய வம்சாவளிகளை இலங்கையில் ஒரு இனக் குழும்பமாக அங்கீகரிக்கின்ற அதே நேரம்  இலங்கை மலையக தமிழ் சமூகத்தை தனியான இனக் குழும்பமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது எனது முன்மொழிவாகும்.அதற்கான விஞ்ஞான முறையான விளக்கத்தை நான் எந்த மேடையிலும் விவாதிக்க நான் தயாராக இருக்கின்றேன். அதற்கான அதாரங்களில் ஒன்று தான் இங்கு வாழ்கின்ற தமிழ் மக்களாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement