• May 20 2024

விக்கிரகங்கள் உடைக்கபட்ட சம்பவமானது தமிழர்களின் மனதில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது - சிறிகாந்தா! samugammedia

Tamil nila / Mar 29th 2023, 9:47 pm
image

Advertisement

விக்கிரகங்கள் உடைக்கபட்ட சம்பவமானது தமிழர்களின் மனதில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது என  தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.


 இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளோம்.



இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


வெடுக்கு நாறி மலையிலுள்ள விக்கிரகங்கள் உடைக்கபட்ட சம்பவமானது தமிழர்களின் மனதில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது


இது தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை அரசியல் கட்சிகள், சமூக மட்ட அமைப்புகள்  மற்றும் மனித உரிமை சார் அமைப்புக்கள் என்பவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  எமது எதிர்ப்பு இயக்கம் தொடர்பான திட்டவட்டமான அறிவிப்பை அறிவிக்கவுள்ளோம்.


இதேவேளை நாளைய தினம் வவுனியாவில்  இடம்பெறவுள்ள எதிர்ப்பு போராட்டத்திற்கு வன்னிப் பிரதேச மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றோம் விடுக்கின்றோம்.


இவற்றுடன் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமன சர்வதேச ரீதியான  அழுத்தத்திற்கு இணங்குவது போல் செயற்பட்டு இச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஏதுவாக அரச வர்த்தகமானியிலே வெளியிட்டுள்ளது.


அச்சட்டத்தை ஆராயும் போது தற்போதுள்ள சட்டத்தை விட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட மோசமான சட்டமாகும்.


சர்வதேசத்திற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீ்க்குவதாக கூறி புதிய சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான குரல்களை பயங்கரவாத முலாம் பூசி ஒடுக்க முற்படுத்தும் இச் சட்டத்தை ஒட்டுமாத்த தமிழர்களும் எதிர்க்க வேண்டும்.


இதற்கெதிராக  வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள் அமைப்புக்களை இணைத்து பாரிய எதிர்ப்பை முதற்கட்டமாகவும், பின்னர் தாயகத்திற்கு வெளியில் இச் சட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்க்கும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.


இச் சட்டமூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒட்டுமொத்தமாக அடக்குவதுடன் முழு நாட்டிலும் ஜனநாயகம் என்ற பெயரிலே சர்வாதிகார அராஜகத்தை நிலைநிறுத்தக் கூடியது என்பதிலே நாடு தழுவிய ரீதியிலே எதிர்ப்பு வெளிப்படுத்தப்படும். இச் சட்டமூலம் கைவிடப்படும் நிலை வரை எமது எதிர்ப்பு  நடவடிக்கைகளை  எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கவுள்ளோம் - என்றார்

விக்கிரகங்கள் உடைக்கபட்ட சம்பவமானது தமிழர்களின் மனதில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது - சிறிகாந்தா samugammedia விக்கிரகங்கள் உடைக்கபட்ட சம்பவமானது தமிழர்களின் மனதில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது என  தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி முக்கிய தீர்மானமொன்றை எடுத்துள்ளோம்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,வெடுக்கு நாறி மலையிலுள்ள விக்கிரகங்கள் உடைக்கபட்ட சம்பவமானது தமிழர்களின் மனதில் பாரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதுஇது தொடர்பில் எதிர்வரும் சனிக்கிழமை அரசியல் கட்சிகள், சமூக மட்ட அமைப்புகள்  மற்றும் மனித உரிமை சார் அமைப்புக்கள் என்பவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  எமது எதிர்ப்பு இயக்கம் தொடர்பான திட்டவட்டமான அறிவிப்பை அறிவிக்கவுள்ளோம்.இதேவேளை நாளைய தினம் வவுனியாவில்  இடம்பெறவுள்ள எதிர்ப்பு போராட்டத்திற்கு வன்னிப் பிரதேச மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டுமென பகிரங்கமாக கோரிக்கை விடுக்கின்றோம் விடுக்கின்றோம்.இவற்றுடன் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமன சர்வதேச ரீதியான  அழுத்தத்திற்கு இணங்குவது போல் செயற்பட்டு இச் சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஏதுவாக அரச வர்த்தகமானியிலே வெளியிட்டுள்ளது.அச்சட்டத்தை ஆராயும் போது தற்போதுள்ள சட்டத்தை விட பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட மோசமான சட்டமாகும்.சர்வதேசத்திற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீ்க்குவதாக கூறி புதிய சட்டத்தை கொண்டுவந்து தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான குரல்களை பயங்கரவாத முலாம் பூசி ஒடுக்க முற்படுத்தும் இச் சட்டத்தை ஒட்டுமாத்த தமிழர்களும் எதிர்க்க வேண்டும்.இதற்கெதிராக  வடகிழக்கிலுள்ள அரசியல் கட்சிகள் அமைப்புக்களை இணைத்து பாரிய எதிர்ப்பை முதற்கட்டமாகவும், பின்னர் தாயகத்திற்கு வெளியில் இச் சட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்க்கும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடி எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.இச் சட்டமூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒட்டுமொத்தமாக அடக்குவதுடன் முழு நாட்டிலும் ஜனநாயகம் என்ற பெயரிலே சர்வாதிகார அராஜகத்தை நிலைநிறுத்தக் கூடியது என்பதிலே நாடு தழுவிய ரீதியிலே எதிர்ப்பு வெளிப்படுத்தப்படும். இச் சட்டமூலம் கைவிடப்படும் நிலை வரை எமது எதிர்ப்பு  நடவடிக்கைகளை  எதிர்வரும் தினங்களில் முன்னெடுக்கவுள்ளோம் - என்றார்

Advertisement

Advertisement

Advertisement