• May 17 2024

கண்டியில் அதிகரிக்கும் தொடர் திருட்டு சம்பவங்கள்!

crownson / Dec 6th 2022, 9:25 am
image

Advertisement

கண்டி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 28 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் சேர்ந்து அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஏழு பேரை கண்டி பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 58 வயதுடையவர் என்றும் இவர் கலஹா பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்னர்.

குறித்த பெண் குறித்த வீட்டில் ஏழு வருடங்களாக பணியாற்றி வந்ததுடன், வீட்டின் உரிமையாளர் சுகவீனம் காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார்.

அவரை பராமரிப்பதற்காகவே இந்த பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் நகைகளை சிறிது சிறிதாக திருடி தனது மகன் மற்றும் மருமகன் மூலம் நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

இதன்படி சந்தேக நபர் சுமார் 28 பவுன் தங்கத்தை திருடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களிடம் தங்க பொருட்களை வாங்கிய இரு தம்பதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்க ஆபரணங்களை செய்யும் வேலைத்தளங்கள் அனுமதி இன்றி நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் கண்டி போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டியில் அதிகரிக்கும் தொடர் திருட்டு சம்பவங்கள் கண்டி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 28 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஏழு பேரை கண்டி பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 58 வயதுடையவர் என்றும் இவர் கலஹா பகுதியை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்னர்.குறித்த பெண் குறித்த வீட்டில் ஏழு வருடங்களாக பணியாற்றி வந்ததுடன், வீட்டின் உரிமையாளர் சுகவீனம் காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். அவரை பராமரிப்பதற்காகவே இந்த பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் நகைகளை சிறிது சிறிதாக திருடி தனது மகன் மற்றும் மருமகன் மூலம் நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். இதன்படி சந்தேக நபர் சுமார் 28 பவுன் தங்கத்தை திருடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் தங்க பொருட்களை வாங்கிய இரு தம்பதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். தங்க ஆபரணங்களை செய்யும் வேலைத்தளங்கள் அனுமதி இன்றி நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் சம்பவம் தொடர்பில் கண்டி போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement