• May 03 2024

லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

Chithra / Dec 6th 2022, 9:32 am
image

Advertisement

மூன்றாவது லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இன்றைய முதலாவது போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான ஜஃப்னா கிங்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் தலைமையிலான கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

முதல் இரண்டு லங்கா ப்றீமியர் கிரிக்கெட் தொடர்களிலும் முதலாவது நாளில் ஒரு போட்டி மாத்திரமே நடத்தப்பட்டது.

எனினும் இந்த முறை முதலாவது தினமான இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதன்படி, ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கழம்போ ஸ்டார்ஸ் மற்றும் வனிந்து ஹசரங்க தலைமையிலான கெண்டி ஃபோல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த முறை லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 42 உள்ளூர் வீரர்களும் 30 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.


தனுஸ்க குணதிலக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.


இதேவேளை, இந்த முறை லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதோடு மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் மூன்றாவது லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.இன்றைய முதலாவது போட்டியில் திஸர பெரேரா தலைமையிலான ஜஃப்னா கிங்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் தலைமையிலான கோல் க்ளேடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்த போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.முதல் இரண்டு லங்கா ப்றீமியர் கிரிக்கெட் தொடர்களிலும் முதலாவது நாளில் ஒரு போட்டி மாத்திரமே நடத்தப்பட்டது.எனினும் இந்த முறை முதலாவது தினமான இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.இதன்படி, ஏஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கழம்போ ஸ்டார்ஸ் மற்றும் வனிந்து ஹசரங்க தலைமையிலான கெண்டி ஃபோல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.இந்த முறை லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 42 உள்ளூர் வீரர்களும் 30 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.தனுஸ்க குணதிலக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.இதேவேளை, இந்த முறை லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 8 பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதோடு மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement