• Sep 08 2024

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Chithra / Dec 6th 2022, 9:35 am
image

Advertisement


இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என தான் கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை நாங்கள் கொண்டு வர வேண்டும். ஆனால் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். 

அப்படியானால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனித உரிமைகள் பற்றியும் அப்பாவிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்

இந்த நாட்டு மக்களுக்கு முதலில் நாம் செய்ய வேண்டிய மிக உயர்ந்த கடமை, அது அப்பாவிகளைப் பாதுகாப்பதாகும். இளைஞர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில்; நாங்கள் இதில் கடுமையாகவும் கண்டிப்புடனும் இருக்கிறோம். 

மரண தண்டனையை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக, இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பதால் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், “புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஆபத்தான மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நியமிப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (பிசி) கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரால் ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அமைச்சரின் அதிரடி அறிவிப்பு இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என தான் கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனையை நாங்கள் கொண்டு வர வேண்டும். ஆனால் மனித உரிமை அமைப்புகள் இதற்கு எதிராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அப்படியானால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனித உரிமைகள் பற்றியும் அப்பாவிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்இந்த நாட்டு மக்களுக்கு முதலில் நாம் செய்ய வேண்டிய மிக உயர்ந்த கடமை, அது அப்பாவிகளைப் பாதுகாப்பதாகும். இளைஞர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில்; நாங்கள் இதில் கடுமையாகவும் கண்டிப்புடனும் இருக்கிறோம். மரண தண்டனையை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக, இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பதால் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும், “புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, ஆபத்தான மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை நியமிப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (பிசி) கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரால் ஒன்றிணைந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement