• May 20 2024

எரிபொருள் விநியோகம் தொடர்பில் தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Mar 31st 2023, 10:11 am
image

Advertisement

நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன.

எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினரின் தலையீட்டின் காரணமாக விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் நாடளாவிய ரீதியில் ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டும் நேற்று 200க்கும் மேற்பட்ட எரிபொருள் பவுசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் தற்போது வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.பல கோரிக்கைகளை முன்வைத்து பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சில தாமதங்கள் ஏற்பட்டன.எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினரின் தலையீட்டின் காரணமாக விநியோக நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினரின் பாதுகாப்பில் நாடளாவிய ரீதியில் ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டும் நேற்று 200க்கும் மேற்பட்ட எரிபொருள் பவுசர்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement