• Sep 20 2024

புத்தளத்தில் இரு நூல்களின் அறிமுக விழா!

Tamil nila / Jan 14th 2023, 9:39 pm
image

Advertisement

மன்னார், சிலாவத்துறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.எம்.அன்ஸார் எழுதிய 'சிலாவத்துறை வரலாறும், கலாசார பண்பாட்டுக் கோலங்களும்', 'சிலாவத்துறை பாடசாலை வரலாறு' எனும் இரு நூல்களின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



ஆசிரியர் ஓ.எம்.இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூல் விமர்சகர் ஓய்வு நிலை அதிபர் என். நாகராஜா, ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் முஹம்மது முஹ்சீன், சிலாவத்துறை அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எம்.எம்.எம்.தையூப் உட்பட கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், உலமாக்கள், வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த நூல் அறிமுக விழாவில் நூல் விமர்சகர் ஓய்வு நிலை அதிபர் என். நாகராஜா நூல் விமர்சன உரையை நிகழ்த்தினார்.

அத்துடன், சிரேஷ்ட ஆசிரியர் பி.எம்.ஜாஹித் நுலாசிரியரிடமிருந்து நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டதுடன், நிகழ்வுக்கு வருகை தந்த ஏனைய அதிதிகளுக்கும் நூலாசிரியரால் குறித்த இரண்டு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.



முன்னார் சிலாவத்துறையின் பண்டைய வரலாற்று முக்கியத்துவத்தையும், முஸ்லிம் குடியேற்றத்தையும் அந்தப் பிரதேசங்களினதும் முஸ்லிம் பண்பாட்டையும் இணைத்து நோக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த 'சிலாவத்துறை வரலாறும், கலாசார பண்பாட்டுக் கோலங்களும்' எனும் நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் இரு நூல்களின் அறிமுக விழா மன்னார், சிலாவத்துறையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான எஸ்.எம்.அன்ஸார் எழுதிய 'சிலாவத்துறை வரலாறும், கலாசார பண்பாட்டுக் கோலங்களும்', 'சிலாவத்துறை பாடசாலை வரலாறு' எனும் இரு நூல்களின் அறிமுக விழா இன்று சனிக்கிழமை புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.ஆசிரியர் ஓ.எம்.இர்ஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூல் விமர்சகர் ஓய்வு நிலை அதிபர் என். நாகராஜா, ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் முஹம்மது முஹ்சீன், சிலாவத்துறை அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எம்.எம்.எம்.தையூப் உட்பட கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், உலமாக்கள், வைத்தியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த நூல் அறிமுக விழாவில் நூல் விமர்சகர் ஓய்வு நிலை அதிபர் என். நாகராஜா நூல் விமர்சன உரையை நிகழ்த்தினார்.அத்துடன், சிரேஷ்ட ஆசிரியர் பி.எம்.ஜாஹித் நுலாசிரியரிடமிருந்து நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டதுடன், நிகழ்வுக்கு வருகை தந்த ஏனைய அதிதிகளுக்கும் நூலாசிரியரால் குறித்த இரண்டு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.முன்னார் சிலாவத்துறையின் பண்டைய வரலாற்று முக்கியத்துவத்தையும், முஸ்லிம் குடியேற்றத்தையும் அந்தப் பிரதேசங்களினதும் முஸ்லிம் பண்பாட்டையும் இணைத்து நோக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த 'சிலாவத்துறை வரலாறும், கலாசார பண்பாட்டுக் கோலங்களும்' எனும் நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement