காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்
காலி சிறையின் துறைத்தலைவர் என்னாயக்கவுக்கு பணம் செலுத்தி, அந்த சிறையின் 'C' செல் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் எண் 2128, மாதரகே ஜனித் நிர்மல மற்றும் லக்துவாஹந்தி சுஜித் பிரசன்ன ஆகியோர், இதுவரை சிறைக்குள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் தொலைபேசிகளை பயன்படுத்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த காணொளிகள் ஒரு மாதத்திற்கு முன்பே, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.
இதையடுத்து தகவல் வழங்கியவர்கள் நேற்றையதினம் இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என தகவல் வழங்கியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை வெளியாகிய அதிர்ச்சி காட்சி காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் காலி சிறையின் துறைத்தலைவர் என்னாயக்கவுக்கு பணம் செலுத்தி, அந்த சிறையின் 'C' செல் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் எண் 2128, மாதரகே ஜனித் நிர்மல மற்றும் லக்துவாஹந்தி சுஜித் பிரசன்ன ஆகியோர், இதுவரை சிறைக்குள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர்.அவர்கள் தொலைபேசிகளை பயன்படுத்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த காணொளிகள் ஒரு மாதத்திற்கு முன்பே, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்தும், இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது. இதையடுத்து தகவல் வழங்கியவர்கள் நேற்றையதினம் இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என தகவல் வழங்கியவர்கள் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.