• Nov 13 2025

கடும் மின்னல் தாக்கம்; இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Chithra / Nov 10th 2025, 2:06 pm
image


ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

05 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.30 மணி வரை முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கடும் மின்னல் தாக்கம்; இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.05 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 17 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று இரவு 11.30 மணி வரை முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement