• Nov 19 2024

இலங்கையின் பிரதான மையங்களாக கொழும்பு, காலி, கண்டி, திருகோணமலை! ஜனாதிபதி ரணில்

Chithra / Aug 21st 2024, 11:59 am
image



கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய நகர்ப்புற பகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கண்டியை ஒரு பெரிய மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன. கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலையில் 4 கட்டப்பட்டுள்ளன. 

இந்த நான்கும் இலங்கையின் முக்கிய மையங்களாக உருவாக்கப்பட உள்ளன. 

மோடியுடன் கலந்துரையாடினேன். சென்னை IIT நிறுவனத்தின் ஒரு வளாகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

நான் கண்டியை பரிந்துரைத்தேன்.  இப்போது கலஹாவில் தொடங்க பரிந்துரைக்கிறேன். அடுத்த 10 வருடங்களில் கண்டியை இலங்கையின் முக்கிய நகரமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம்.''

வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாத்து ஹில்டன் நிறுவனத்துடன் இணைந்து போகம்பரை சிறைச்சாலையை ஹோட்டலாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி சந்தையை மீள் அபிவிருத்தி செய்வதற்கும், மறைந்த கெர்ரிஹில் கட்டிடக் லைஞரின் நிறுவனத்திடம் இருந்து போகம்பரா பகுதியையும் அரண்மனையையும் சேர்க்கும் திட்டமும் உள்ளது" என்றார்.

இலங்கையின் பிரதான மையங்களாக கொழும்பு, காலி, கண்டி, திருகோணமலை ஜனாதிபதி ரணில் கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய நகர்ப்புற பகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியை ஒரு பெரிய மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன. கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலையில் 4 கட்டப்பட்டுள்ளன. இந்த நான்கும் இலங்கையின் முக்கிய மையங்களாக உருவாக்கப்பட உள்ளன. மோடியுடன் கலந்துரையாடினேன். சென்னை IIT நிறுவனத்தின் ஒரு வளாகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கண்டியை பரிந்துரைத்தேன்.  இப்போது கலஹாவில் தொடங்க பரிந்துரைக்கிறேன். அடுத்த 10 வருடங்களில் கண்டியை இலங்கையின் முக்கிய நகரமாக மாற்றுவதுதான் இந்தத் திட்டங்களின் நோக்கம்.''வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாத்து ஹில்டன் நிறுவனத்துடன் இணைந்து போகம்பரை சிறைச்சாலையை ஹோட்டலாக மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.கண்டி சந்தையை மீள் அபிவிருத்தி செய்வதற்கும், மறைந்த கெர்ரிஹில் கட்டிடக் லைஞரின் நிறுவனத்திடம் இருந்து போகம்பரா பகுதியையும் அரண்மனையையும் சேர்க்கும் திட்டமும் உள்ளது" என்றார்.

Advertisement

Advertisement

Advertisement