• Sep 20 2024

கொடையாளர்களிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் - வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி.!

Tamil nila / Feb 12th 2023, 5:57 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையிலுள்ள பிதேச வைத்தியசாலையில் தற்போது பாரிய மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை நோயாளர் காவு வண்டி இன்மையால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார்.


இன்று ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து தமது வைத்தியசாலையில் நிலவுகின்ற பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்.


பிரதேச வைத்தியசாலைக்கு என ஒதுக்கப்படுகின்ற நிதிகூட தற்போது வரையில் ஒதுக்கப்படவில்லை என்றும் இதனால் நோயாளர் காவுவண்டி செயற்திறன் அற்றநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் நிதி இல்லை என்றும் எனவே நன்கொடையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த செல்வந்தர்கள்.


உதவுவதற்கு முன்வருமாறு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்களுக்கான பாணி மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்யுமாறு கூறுவதற்கு கவலையாக உள்ளதாக ரதினி காந்தநேசன் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு மாகாணத்தின் சுகாதார திணைக்களத்திற்கான உதவிகள் குறைவாகவே கிடைப்பதாகவும் அவ்வாறு கிடைக்கின்ற உதவிகள் கூட வவுனியா மாவட்டத்திற்கே அதிகம் செல்வதாக ரதினி காந்தநேசன் குறிப்பிட்டுள்ளார்.


எனவே காவு வண்டியை திருத்துவதற்கான நிதி மற்றும் குழந்தைகளுக்கான அத்தியவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு கொடையாளர்களை முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொடையாளர்களிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் - வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையிலுள்ள பிதேச வைத்தியசாலையில் தற்போது பாரிய மருத்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை நோயாளர் காவு வண்டி இன்மையால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் தெரிவித்துள்ளார்.இன்று ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து தமது வைத்தியசாலையில் நிலவுகின்ற பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்திருந்தார்.பிரதேச வைத்தியசாலைக்கு என ஒதுக்கப்படுகின்ற நிதிகூட தற்போது வரையில் ஒதுக்கப்படவில்லை என்றும் இதனால் நோயாளர் காவுவண்டி செயற்திறன் அற்றநிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மருந்துகளை கொள்வனவு செய்வதற்கும் நிதி இல்லை என்றும் எனவே நன்கொடையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த செல்வந்தர்கள்.உதவுவதற்கு முன்வருமாறு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்களுக்கான பாணி மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்யுமாறு கூறுவதற்கு கவலையாக உள்ளதாக ரதினி காந்தநேசன் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு மாகாணத்தின் சுகாதார திணைக்களத்திற்கான உதவிகள் குறைவாகவே கிடைப்பதாகவும் அவ்வாறு கிடைக்கின்ற உதவிகள் கூட வவுனியா மாவட்டத்திற்கே அதிகம் செல்வதாக ரதினி காந்தநேசன் குறிப்பிட்டுள்ளார்.எனவே காவு வண்டியை திருத்துவதற்கான நிதி மற்றும் குழந்தைகளுக்கான அத்தியவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு கொடையாளர்களை முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement