சர்வதேச உழைப்பாளர் தினம் மற்றும் புனித/சூசையப்பர்
திருநாளை முன்னிட்டு தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய நிர்வாக சபை
உறுப்பினர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட போட்டி விளையாட்டுக்கள்
நேற்று ஞாயிற்றுகிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை இரு நாட்கள் தாழ்வுபாடு
கடல் பகுதியில் இடம் பெற்றது.
நீச்சல்,உள்நீச்சல்,கட்டுமரம்
வளித்தல்,மைதான நிகழ்வுகள் உள்ளடங்களாக பல போட்டிகள் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் மீனவர்கள்,இளைஞர்கள்,கிராம மக்கள் தாழ்வுபாடு புனித
சூசையப்பர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நேற்றைய,இன்றைய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருமதியான பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.